இது போதுமே... இண்டர்நெட் இல்லாமல் ஜிமெயில் பயன்படுத்த ஈசி டிப்ஸ்...!

By Kevin Kaarki  |  First Published Jun 28, 2022, 10:03 PM IST

கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் சேவையை இண்டர்நெட் இல்லாத போதும், ஆப்லைனில் பயன்படுத்தும் வசதியை வழங்கி இருக்கிறது. 


ஜிமெயில் மெசேஜ்களை இயக்க இண்டர்நெட் அவசியம் என்ற நிலை தற்போது நீங்கி இருக்கிறது. கூகுள்  சப்போர்ட் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இனி இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் நேரடியாக mail.google.com தளத்தில் ஜிமெயில் மெசேஜ்களை படிப்பது, பதில் அனுப்புவது, ஜிமெயில் சர்ச் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்: ஸ்மார்ட்போன்களுக்கு வேற லெவல் சலுகைகள் - அமேசான் அதிரடி...!

Tap to resize

Latest Videos

ஆப்லைனில் இருந்து கொண்டே ஜிமெயில் மெசேஜ்களை இயக்கும் சேவையை சீராக பயன்படுத்திக் கொள்ள கூகுள் mail.google.com தளத்தை புக்மார்க் செய்து கொள்ள பரிந்துரை வழங்கி இருக்கிறது. ஜிமெயில் மெசேஜ்களை ஆப்லைனில் மாற்றுவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம். 

இதையும் படியுங்கள்: ரூ. 49 விலையில் புது சலுகை.... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வி நிறுவனம்..!

ஜிமெயில் மெசேஜ்களை ஆப்லைனில் இயக்குவது எப்படி?

ஜிமெயில் மெசேஜ்களை ஆப்லைனில் இயக்க முதலில் கூகுள் குரோம் பிரவுசரை டவுன்லோட் செய்ய வேண்டும். இந்த அம்சம் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சீராக இயங்கும். கூகுள் குரோம் பிரவுசரிலும் Incognito mode-இல் இந்த அம்சம் இயங்காது. கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின் பற்றி ஜிமெயில் மெசேஜஸ் ஆப்லைன் அம்சத்தை செயல்படுத்திக் கொள்ளலாம். 

இதையும் படியுங்கள்: விரைவில் இந்தியா வரும் நார்டு 2t ஸ்மார்ட்போன்.. விலை இவ்வளவு தானா?

1 - முதலில் ஜிமெயில் ஆப்லைன் செட்டிங்ஸ்-ஐ திறக்க வேண்டும்
2 - அடுத்து ‘Enable offline mail’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
3 - இனி எத்தனை நாட்களுக்கான மெசேஜ்களை சின்க் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்
4 - இறுதியில் ‘Save changes’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

ஜிமெயில் மெசேஜ்களை ஆப்லைனில் இயக்க குரோம் பிரவுசரில் ஜிமெயிலை புக்மார்க் செய்து கொள்ள கூகுள் பரிந்துரை வழங்கி உள்ளது. இதற்கு இணைய முகவரி அருகில் இருக்கும் ஸ்டார் ஐகானை கிளிக் செய்து ‘Done’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். ஆப்லைன் இமெயில்கள் முதலில் அவுட்பாக்ஸ் ஃபோல்டருக்கு சென்று, ஆன்லைன் சென்ற பின் சம்பந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். 

ஜிமெயில் மெசேஜஸ் ஆப்லைன் வசதியை நீக்குவது எப்படி?

1 - கூகுள் குரோம் பிரவுசரை திறக்க வேண்டும்
2 - செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
3 - அட்வான்ஸ்டு ஆப்ஷனில் உள்ள ‘Privacy and security’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
4 - இனி  ‘Content settings’ ஆப்ஷனை க்ளிக் செய்து  ‘Cookies’ அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்
5 - அடுத்து ‘Cookies’ மற்றும் சைட் டேட்டா உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும்
6 - இனி ஜிமெயில் ஆப்லைன் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்
7 - இறுதியில் ‘Enable offline mail’ ஆப்ஷனை அன்செக் செய்து விட வேண்டும் 

click me!