இந்திய சந்தையில் புதிய நார்டு அணியக் கூடிய சாதனத்திற்கான சோதனையை ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே துவங்கி விட்டதாக தகவல்.
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் பிரிவில், மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் பியூரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் 2022 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
இதையும் படியுங்கள்: ஸ்மார்ட்போன்களுக்கு வேற லெவல் சலுகைகள் - அமேசான் அதிரடி...!
இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மூன்றாவது ஸ்மார்ட்வாட்ச் மாடலாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்திய சந்தையில் நார்டு பிராண்டிங் கொண்டு அறிமுகம் செய்யப்படும் முதல் ஸ்மார்ட்வாட்ச் இது என தகவல் வெளஇயாகி உள்ளது. இந்திய சந்தையில் ஒன்பிளஸ் வாட்ச் மற்றும் ஒன்பிளஸ் பேண்ட் மாடல்கள் முறையே ரூ. 14 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 799 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்: விரைவில் இந்தியா வரும் நார்டு 2t ஸ்மார்ட்போன்.. விலை இவ்வளவு தானா?
புது நார்டு வாட்ச் விவரங்களை பிரபல டிப்ஸ்டரான முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கிறார். இவர் தான் இந்த வாட்ச் BIS சான்று பெற்று இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதே தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இணையதள ஸ்கிரீன்ஷாட் ஒன்றையும் முகுல் ஷர்மா வெளியிட்டு உள்ளார். இந்திய சந்தையில் புதிய நார்டு அணியக் கூடிய சாதனத்திற்கான சோதனையை ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே துவங்கி விட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும், இது பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இதையும் படியுங்கள்: ரூ. 49 விலையில் புது சலுகை.... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வி நிறுவனம்..!
பெரும் எதிர்பார்ப்புகளுடன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் பயனர்களிடம் இருந்து போதிய வரவேற்பை பெறவில்லை. பலரும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான மென்பொருள் பிழைகளை கொண்டு இருக்கிறது என குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருக்கும் நார்டு ஸ்மார்ட்வாட்ச் இவ்வாறு எந்த பிரச்சினைகளையும் கொண்டிருக்காது என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு ஸ்மார்ட்வாட்ச் மாடலை 42mm மற்றும் 46mm என இருவித அளவுகளில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை கவர முடியும் என ஒன்பிளஸ் திட்டமிட்டு இருக்கலாம் என தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய நார்டு ஸ்மார்ட்வாட்ச் 24x7 இதய துடிப்பு மாணிட்டர், SpO2 மாணிட்டர், பீடோமீட்டர், ஸ்லீப் மாணிட்டர், ஸ்டெப் கவுண்ட்டர் என ஏராள வசதிகளை கொண்டிருக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என்றும் இதில் வட்ட வடிவம் கொண்ட டையல் வழங்கப்படும் என தெரிகிறது. ஒன்பிளஸ் வாட்ச் போன்றே நார்டு ஸ்மார்ட்வாட்ச் மாடலும் பிரத்யேக ஓ.எஸ். கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.