20 மொழிகளை சேர்ந்த பாடல்கள் சுமார் பத்து பிரிவுகளில் வரிசைப்படுத்தப்பட்டு பயனர்கள் தேர்வு செய்வதற்காக வழங்கப்பட்டு உள்ளன.
வி நிறுவன சந்தாதாரர்கள் வழக்கமாக வரும் 'ட்ரிங் ட்ரிங்' ஒலிக்கு மாற்றாக தாங்கள் விரும்பும் இசையை தேர்வு செய்து அவற்றை இன்கமிங் அழைப்புகளுக்கு செட் செய்து கொள்ளும் வசதியை பெற்று உள்ளனர். இதில் பயனர்கள் அவர்கள் விரும்பும் பாடல் எதுவாக இருந்தாலும் அவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: மிட்-ரேன்ஜ் விலையில் விற்பனைக்கு வரும் நத்திங் போன் (1).. இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்..!
வி செயலியில் சமீபத்திய ஹிட் பாடல்களில் துவங்கி ஏராளமான இசை விளம்பர தொந்தரவு இன்றி ஹெச்.டி. தரத்தில் வழங்கப்படுகிறது. இதில் 20 மொழிகளை சேர்ந்த பாடல்கள் சுமார் பத்து பிரிவுகளில் வரிசைப்படுத்தப்பட்டு பயனர்கள் தேர்வு செய்வதற்காக வழங்கப்பட்டு உள்ளன. முன்னதாக வி நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு புது சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: விரைவில் இந்தியா வரும் நார்டு 2t ஸ்மார்ட்போன்.. விலை இவ்வளவு தானா?
பயனர்கள் பக்தி, ரோமான்ஸ், மெலோடி, காமெடி, குத்து, ரீஜினல், என ஏராளமான பிரிவுகளில் பாடல்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. காலர் டியூன் சந்தாதாரர்கள் வி ஆப் மியூசிக் பகுதியை எந்த விதமான கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்த முடியும். புதிய காலர் டியூன் சேவைகளை பயனர்கள் மாதாந்திர சந்தா அடிப்படையில் பயன்படுத்தலாம்.
இதையும் படியுங்கள்: ப்ளூடூத் காலிங் வசதியுடன் ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான புது ஸ்மார்ட்வாட்ச்..!
மாதாந்திர சந்தா கட்டணம் ரூ. 49-இல் இருந்து துவங்குகிறது. காலாண்டு கட்டணம் ரூ. 99, வருடாந்திர கட்டணம் ரூ. 249 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. காலர் டியூன் சேவையில், இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியும் சேர்த்தே வழங்கப்படுகிறது.
வி செயலி மூலம் காலர் டியூன் ஆக்டிவேட் செய்வது எப்படி?
வழிமுறை 1: முதலில் ‘Set as caller tune’ ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் விருப்ப பாடலை காலர் டியூனாக செட் செய்யலாம்.
வழிமுறை 2: உங்களுக்கு தேவையான வேலிடிட்டி காலம் மற்றும் வாடகை பேக்கேஜ் விவரங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
வழிமுறை 3: உங்களின் தேர்வை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
வழிமுறை 4: காலர் டியூன் சேவை உறுதிப்படுத்துதல்.
காலர் டியூன் செட் செய்வதோடு மட்டும் இன்றி வி பயனர்கள்20-க்கும் அதிக மொழிகளில் சுமார் 2 கோடிக்கும் அதிக பாடல்களை கேட்டு ரசிக்கும் வசதி, ஹெச்.டி. வாய்ஸ், அன்லிமிடெட் டவுன்லோட்கள், 6 மாதத்திற்கு பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.