இந்திய சந்தையில் நத்திங் போன் (1) மாடல் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மூலம் ஆப்லைன் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக நத்திங் போன் (1) இருக்கிறது. இது நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் நத்திங் போன் (1) ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும், நத்திங் போன் (1) மாடல் எப்படி காட்சி அளிக்கும் என்பதோடு ஸ்மார்ட்போன் பற்றிய பல விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி விட்டன.
இதையும் படியுங்கள்: விரைவில் இந்தியா வரும் நார்டு 2t ஸ்மார்ட்போன்.. விலை இவ்வளவு தானா?
undefined
அந்த வரிசையில், நத்திங் போன் (1) மாடலின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன் படி இந்திய சந்தையில் புதிய நத்திங் போன் (1) ஸ்மார்ட்போன் 8GB ரேம், 128GB மெமரி, 8GB ரேம், 256GB மெமரி மற்றும் 12GB ரேம், 256GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: பட்ஜெட் விலையில் புது 5ஜி போன்... அடுத்த அதிரடிக்கு தயாரான ரெட்மி?
இவற்றின் விலை முறையே 397 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 31 ஆயிரம், 419 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 32 ஆயிரம் மற்றும் 456 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 36 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மற்ற பகுதிகளில் நத்திங் போன் (1) அறிமுகமாகி இரண்டு வாரங்கள் கழித்தே அதன் விற்பனை துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் நத்திங் போன் (1) மாடல் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மூலம் ஆப்லைன் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்: ப்ளூடூத் காலிங் வசதியுடன் ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான புது ஸ்மார்ட்வாட்ச்..!
நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் நத்திங் போன் (1) பிளாக் மற்றும் வைட் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கும். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நத்திங் போன் (1) ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், பன்ச் ஹோல் கட் அவுட், குவால்காம் ஸன்பாடிராகன் 778 பிளஸ் 5ஜி பிராசஸர், 12GB ரேம், 256GB மெமரி, 5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை 6, ப்ளூடூத் 5.1 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளன.
நத்திங் போன் (1) அம்சங்கள்:
- 6.55 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர்
- 8GB ரேம்
- 128GB, 256GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 50MP பிரைமரி கேமரா
- 8MP அலட்ரா வைடு அல்லது டெப்த் கேமரா
- 32MP செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த நத்திங் ஓ.எஸ்.
- 5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை 6, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
- 4500mAh பேட்டரி
- 45 வாட் சார்ஜிங்