மீண்டும் மீண்டுமா? வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த டாடா மோட்டார்ஸ்..!

By Kevin Kaarki  |  First Published Jun 28, 2022, 6:18 PM IST

வர்த்தக வாகனங்கள் பிரிவில் இந்திய சந்தையில் முன்னணி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாட்டின் முன்னணி வர்த்தக வாகன உற்பத்தியாளராக விளங்கி வருகிறது. இந்திய சந்தையில் டாடா வர்த்தக வாகன மாடல்கள் விலை ஜூலை 1, 2022 முதல் உயர்த்தப்படுவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அதன் படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விலை 1.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: ஹைப்ரிட் பவர்டிரெயின், 10 வேரியண்ட்கள்... அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா..!

Tap to resize

Latest Videos

விலை உயர்வு குறிப்பிட்ட மாடல், வேரியண்ட் அடிப்படையில் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். வாகன உற்பத்திக்கு ஏற்படும் செலவீனங்களை குறைக்க டாடா மோட்டார்ஸ் ஏராளமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. எனினும், தொடர்ச்சியாக விலை உயர்வு ஏற்படுவதை அடுத்து வாகனங்கள் விலை உயர்வை அறிவிப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: ரூ. 11 லட்சம் விலையில் புது டுகாட்டி பைக் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சர்வதேச சந்தையில் கார், யுடிலிட்டி வாகனங்கள், பிக்-அப்கள், டிரக் மற்றும் பேருந்துகள் என பல வாகனனங்களை விற்பனை செய்து வரும் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக டாடா மோட்டார்ஸ் இருக்கிறது. வர்த்தக வாகனங்கள் பிரிவில் இந்திய சந்தையில் முன்னணி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. பயணிகள் வாகனங்கள் பிரிவில் இந்திய சந்தையின் முதல் மூன்று இடங்களுக்குள் டாடா மோட்டார்ஸ் உள்ளது.

இதையும் படியுங்கள்: அழகாய் உருவாகும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்... அசத்தல் டீசர்கள் வெளியீடு..!

புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற புது வாகனங்களை அறிமுகம் செய்வதில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா, லண்டன், அமெரிக்கா, இத்தாலி மற்றும் தென் கொரியா என உலகின் பல்வேறு நாடுகளில் டிசைன் மற்றும் ஆய்வு, வளர்ச்சி மையங்களை டாடா மோட்டார்ஸ் இயக்கி வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்கால போக்குவரத்து முறைகள் மூலம் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் தொழில்நுட்பங்கள் அடங்கிய வாகனங்களை அறிமுகம் செய்யும் நோக்கம் கொண்டுள்ளது. 

டாடா மோட்டார்ஸ் நிறுவன வாகனங்கள் இந்தியா மட்டும் இன்றி ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இதர நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீப காலங்களில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. 

click me!