டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மூலம் டுகாட்டி நிறுவனம் தனது ஸ்கிராம்ப்ளர் 800 சீரிஸ் மாடல்கள் எண்ணிக்கையை ஐந்தாக அதிகரித்து இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்டு மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டுகாட்டி ஸ்கிராம்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மூலம் டுகாட்டி நிறுவனம் தனது ஸ்கிராம்ப்ளர் 800 சீரிஸ் மாடல்கள் எண்ணிக்கையை ஐந்தாக அதிகரித்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: அழகாய் உருவாகும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்... அசத்தல் டீசர்கள் வெளியீடு..!
ஸ்கிராம்ப்ளர் ஐகான், ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க், ஸ்கிராம்ப்ளர் நைட்ஷிப்ட், ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் போன்ற மாடல்களை டுகாட்டி நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடலும் இணைந்து இருக்கிறது. டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் சீரிசில் எண்ட்ரி லெவல் மாடலாக ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க் இருக்கிறது. இதன் விலை ரூ. 8 லட்சத்து 38 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்: ரெட்ரோ டிசைன், 4 வீல் டிரைவ் வசதியுடன் புது ஆல்டோ அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?
இந்த வரிசையில், விலை உயர்ந்த மற்றும் டாப் எண்ட் மாடல் என்ற பெருமையை புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் இருக்கிறது. நகர சூழலை அனுபவிக்க செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கும் மோட்டார்சைக்கிள் தான் புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் என டுகாட்டி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த பைக்கில் புதிய மற்றும் ஒரிஜினல் லிவரி உள்ளது.
இதையும் படியுங்கள்: தொடர் சோதனையில் ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 - இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்கள்..!
இந்த மாடலுக்கான கிராபிக் டிசைன் வொர்ல்ட் ஆப் ஸ்டிரீட் மற்றும் மெட்ரோபொலிடன் கிராபிட்டியை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் எடை 180 கிலோ ஆகும். இதில் 803சிசி, எல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஏர் கூல்டு, இரு வால்வுகள் கொண்ட என்ஜின் 73 ஹெச்.பி. பவர், 66.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதன் சேசிஸ்-இல் உள்ள டிரெலிஸ் பிரேம் பிளாக் டியுபுலர் ஸ்டீல், முன்புறம் மற்றும் பின்புறங்களில் கயபா சஸ்பென்ஷன், 17 இன்ச் ஸ்போக் வீல்கள், பைரெலி டையப்லோ ரோஸோ 3 டையர்கள் உள்ளன. இத்துடன் போஷ் காரனெரிங் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் மாடல் டுகாட்டி மல்டிமீடியா சிஸ்டத்திற்காகவும் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த பைக் ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இதன் சீட் அடியில் யு.எஸ்.பி. சாக்கெட் வழங்கப்பட்டு உள்ளது.