விரைவில் இந்தியா வரும் நார்டு 2t ஸ்மார்ட்போன்.. விலை இவ்வளவு தானா?

By Kevin KaarkiFirst Published Jun 27, 2022, 10:09 PM IST
Highlights

ஏற்கனவே இணையத்தில் வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் ஒன்பிளஸ் நார்டு 2t ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நார்டு 2t ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் புதிய நார்டு ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசரும் வெளியிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நார்டு 2t ஸ்மார்ட்போன் ஐரோப்பா மற்றும் லண்டனில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்: அதிரடி சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த ரியல்மி ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு தெரியுமா?

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் நார்டு 2t ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ. 28 ஆயிரத்து 999 என துவங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் நார்டு 2t ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் இந்தியா வலைதளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. 

தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரின் படி ஒன்பிளஸ் நார்டு 2t ஸ்மார்ட்போன் ஜேட் ஃபாக் மற்றும் கிரே ஷேடோ நிறங்களில் கிடைக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் என்றும் உறுதியாகி இருக்கிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 2t ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 32MP இன் ஸ்கிரீன் கேமரா வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ப்ளூடூத் காலிங் வசதியுடன் ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான புது ஸ்மார்ட்வாட்ச்..!

இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP போர்டிரெயிட் லென்ஸ் மற்றும் 4500mAh பேட்டரி, 80 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. 

ஒன்பிளஸ் நார்டு 2t அம்சங்கள்:

- 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 3GHz ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 6nm பிராசஸர்
- ARM G77 MC9 GPU
- 8GB LPDDR4X ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GB LPDDR4X ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ், OIS
- 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2MP மோனோ கேமரா, f/2.4
- 32MP செல்பி கேமரா, f/2.4 
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
- 5G, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2 
- யு.எஸ்.பி. டைப் சி
- 4500mAh பேட்டரி
- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் 

click me!