அதிரடி சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த ரியல்மி ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Jun 27, 2022, 9:19 PM IST

ஸ்மார்ட்போனிற்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 


ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் இருந்து துவங்குகிறது. அம்சங்களை பொருத்த வரை புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட், 120Hz டச் சேம்ப்லிங் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்: இனி அந்த மாதிரி எல்லாம் ஏமாற்ற முடியாது... உஷாரான இன்ஸ்டா.. அடுத்து என்ன தெரியுமா?

Tap to resize

Latest Videos

undefined

இத்துடன்  யுனிசாக் T612 பிராசஸர், அதிகபட்சம் 3GB ரேம், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி UI கோ எடிஷன் ஓ.எஸ். வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போன் மாடலில் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. டிசைனை பொருத்தவரை ரியல்மி C30 ஸ்மார்ட்போன் 8.5mm அளவு மெல்லிய பாடி மற்றும் வெர்டிகல் ஸ்டிரைப் டிசைன் கொண்டிருக்கிறது. புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்: 15000mAh பேட்டரி கொண்ட புது ஸ்மார்ட்போன்... ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம்..!

விலை மற்றும் அறிமுக சலுகை விவரங்கள்:

இந்திய சந்தையில் புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போன் 2GB ரேம், 32GB மெமரி மற்றும் 3GB ரேம், 32GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் 2GB ரேம், 32GB மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 499 என்றும் 3GB ரேம், 32GB மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பாம்பூ கிரீன், டெனிம் பிளாக் மற்றும் லேக் புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்: ஹியரிங் ஏய்ட் அம்சம் கொண்டு உருவாகும் புது ஏர்பாட்ஸ் ப்ரோ... எதற்கு தெரியுமா..?

புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளம் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் மொபிகுயிக் வாலெட் வாடிக்கையாளர்கள் ரியல்மி இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் ரூ. 350 தள்ளுபடி பெற முடியும். இத்துடன் எக்சேன்ஜ் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

ரியல்மி C30 அம்சங்கள்:

- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், 120Hz டச் சாம்ப்லிங் ரேட்
- 1.82 GHz UNISOC T612 ஆக்டா கோர் 12nm பிராசஸர்
- மாலி-G57 GPU
- 2GB / 3GB LPDDR4X ரேம்
- 32GB UFS 2.2 ஸ்டோரேஜ்
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட் 
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி ஓ.எஸ்.
- 8MP பிரைமரி கேமரா, f/2.0, LED ஃபிளாஷ்
- 5MP செல்பி கேமரா, f/2.2
- 3.5mm ஆடியோ ஜாக்
- பக்க வாட்டில் கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
- 5,000 mAh பேட்டரி
- 10W சார்ஜிங் 

click me!