ப்ளூடூத் காலிங் வசதியுடன் ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான புது ஸ்மார்ட்வாட்ச்..!

By Kevin KaarkiFirst Published Jun 27, 2022, 8:27 PM IST
Highlights

கிஸ்மோர் பிராண்டு மேட் இன் இந்தியா கிஸ்பிட் 910 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.

கிஸ்மோர் பிராண்டு இந்திய சந்தையில் தனது ஸ்லேட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது  பெண்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்வாட்ச் ஆகும். புதிய கிஸ்மோர் ஸ்லேட் ஸ்மார்ட்வாட்ச் ஸ்னாப்டீல் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது. சமீபத்தில் தான் கிஸ்மோர் பிராண்டு மேட் இன் இந்தியா கிஸ்பிட் 910 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. 

இதையும் படியுங்கள்: 15000mAh பேட்டரி கொண்ட புது ஸ்மார்ட்போன்... ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம்..!

புதிய கிஸ்மோர் ஸ்லேட் புதிய தலைமுறை பிட்னஸ்-ஐ கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இது ஸ்டைலிஷ் தோற்றம் மட்டும் இன்றி பிட்னஸ் சார்ந்து ஏராள அம்சங்களை கொண்டு இருக்கிறது. புதிய கிஸ்மோர் ஸ்லேட் ஸ்மார்ட்வாட்ச் பெண் பயனர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் தோற்றம் போட்டி நிறுவன மாடல்களில் இருந்து இதனை தனிமைப்படுத்தும் வகையில் உள்ளது. 

இதையும் படியுங்கள்: ஹியரிங் ஏய்ட் அம்சம் கொண்டு உருவாகும் புது ஏர்பாட்ஸ் ப்ரோ... எதற்கு தெரியுமா..?

அம்சங்கள்:

செவ்வக வடிவம் கொண்ட கிஸ்மோர் ஸ்லேட் ஸ்மார்ட்வாட்ச் மாடல் 1.57 இன்ச் IPS வளைந்த டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. மேலும் இதில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே உள்ளது. புதிய கிஸ்மோர் ஸ்லேட் ஸ்மார்ட்வாட்ச் மெல்லிய மெட்டல் ஃபிரேம் மூலம் என்கேஸ் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் சிலிகான் ஸ்டிராப் உள்ளது. இவை ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தை அழகாக்குகின்றன. 

இதையும் படியுங்கள்: இனி அந்த மாதிரி எல்லாம் ஏமாற்ற முடியாது... உஷாரான இன்ஸ்டா.. அடுத்து என்ன தெரியுமா?

அன்றாட நடவடிக்கைகளை முழுமையாக டிராக் செய்து பெண்களுக்கு ஏற்ற பல்வேறு ஃபிட்னஸ் அம்சங்களை கிஸ்மோர் ஸ்லேட் ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாதவிடாய் சுழற்சி, இரத்தத்தில் உள்ள காற்றின் அளவு, இதய துடிப்பு, உறக்கம், ஹைட்ரேஷன் மற்றும் மெடிடேடிவ் பிரீதிங் என பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் பல்வேறு ஸ்போர்ட் மோட்கள் உள்ளன. 

இது தவிர இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட், ப்ளூடூத் காலிங், உடல் வெப்பநிலையை கணக்கிடும் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கிறது. கிஸ்மோர் ஸ்லேட் ஸ்மார்ட்வாட்ச் நூற்றுக்கும் அதிக வாட்ச் பேஸ்களை கொண்டு இருக்கிறது. மேலும் இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக ஏழு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

கிஸ்மோர் ஸ்லேட் ஸ்மார்ட்வாட்ச் ஸ்னாப்டீல் தளத்தில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 2 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கிஸ்மோர் ஸ்லேட் ஸ்மார்ட்வாட்ச் பின்க், கிரே மற்றும் பிளாக் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் விற்பனை செய்யப்படும். அதன் பின் இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 699 என மாறி விடும். 

click me!