70+ கனெக்டெட் அம்சங்களுடன் புது ஸ்கார்பியோ N இந்தியாவில் அறிமுகம்.. ஆனால் ஒரு டுவிஸ்ட்..!

By Kevin Kaarki  |  First Published Jun 27, 2022, 6:56 PM IST

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்கார்பியோ N மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


மஹிந்திரா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஸ்கார்பியோ N மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடலின் முன்பதிவு மற்றும் வினியோக விவரங்கள் மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்:  நீண்ட ரேன்ஜ் வழங்கும் புது ஏத்தர் 450X.. வெளியீடு எப்போ தெரியுமா?

Latest Videos

undefined

அதன்படி மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் முன்பதிவு ஜூலை 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைன் மற்றும் மஹிந்திரா விற்பனை மையங்களில் துவங்க இருக்கிறது. இந்த மாடலின் வினியோகம் பண்டிகை காலக் கட்டத்தில் துவங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் டெஸ்ட் டிரைவ் ஜூலை 5 ஆம் தேதி முதல் 30 நகரங்களில் துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 15 ஆம் தேதி நாட்டின் மற்ற நகரங்களிலும் துவங்க உள்ளது. 

அசத்தல் அர்பன் எஸ்.யு.வி.:

முழுக்க முழுக்க துவக்கத்தில் இருந்து உருவாக்கப்பட்டு இருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ N அர்பன் எஸ்.யு.வி. மாடல் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்து உள்ளது. புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் ஏராளமான அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. 

இதையும் படியுங்கள்: ரெட்ரோ டிசைன், 4 வீல் டிரைவ் வசதியுடன் புது ஆல்டோ அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் - Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L என மொத்தம் ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் டாடா ஹேரியர், டாடா சஃபாரி, ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஹூண்டாய் அல்கசார் போன்ற மாடல்களுக்கு இந்திய சந்தையில் போட்டியாக அமைகிறது. 

இதையும் படியுங்கள்:  வரைவு மசோதாவுக்கு அனுமதி... இந்தியாவில் அமலுக்கு வரும் பாரத் NCAP... எப்போ தெரியுமா?

மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலில் அதிக இட வசதி கொண்ட கேபின் உள்ளது. இத்துடன் 12 ஸ்பீக்கர்கள் அடங்கிய சோனி சிஸ்டம், 3D சரவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 20.32 செ.மீ. இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், அகலமான சன்ரூஃப், காஃபி பிளாக் லெதர் இருக்கைகள், 6 விதங்களில் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய இருக்கைகள் மற்றும் 70 மேற்பட்ட கனெக்டெட் கார் அம்சங்களை கொண்டுள்ளது. 

அதிக டிரைவ் மோட்கள்:

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் - டார்மேக், ஸ்னோ, மட் மற்றும் டெசர்ட் என பல்வேறு டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் மூன்றாம் தலைமுறை பாடி ஆன் ஃபிரேம் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது காருக்கு ஆஃப் ரோடிங் வசதி மற்றும் அதிவேகமாக பயணிக்கும் போதும் சிறப்பான கண்ட்ரோல் வழங்குகிறது. இந்த மாடலில் எம் ஸ்டேலியன் பெட்ரோல் எனஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 200 பி.எஸ். பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இது மட்டும் இன்றி புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் எம் ஹாக் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 175 பி.எஸ். பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோ கியர்பாக்ஸ், ஷிப்ட் பை வயர் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

click me!