ஷாட்கன் 650 ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் 650 ட்வின்ஸ் பிளாட்பார்மில் மற்றும் ஓர் மாடலாக இணைய இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் மோட்டார்சைக்கிள் மாடலாக ஷாட்கன் 650 இருக்கிறது. பலமுறை சர்வதேச சந்தையில் சோதனை செய்யப்பட்டு வந்த ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. வெளிநாடுகள் மட்டும் இன்றி இந்திய சந்தையிலும் புதிய ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 சோதனை நடைபெற்று வருவதை ஸ்பை படங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.
இதையும் படியுங்கள்: ரெட்ரோ டிசைன், 4 வீல் டிரைவ் வசதியுடன் புது ஆல்டோ அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?
அந்த வரிசையில், உற்பத்திக்கு தயார் நிலையில் காட்சி அளிக்கும் ஷாட்கன் 650 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. ராயல் என்பீல்டு SG650 கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஷாட்கன் 650 ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் 650 ட்வின்ஸ் பிளாட்பார்மில் மற்றும் ஓர் மாடலாக இணைய இருக்கிறது.
இதையும் படியுங்கள்: நீண்ட ரேன்ஜ் வழங்கும் புது ஏத்தர் 450X.. வெளியீடு எப்போ தெரியுமா?
பிளாட்பார்ம்:
தற்போது ராயல் என்பீல்டு இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜி.டி. 650 போன்ற மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கும் பிளாட்பார்மில் தான் ஷாட்கன் 650 மாடலும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதே பிளாட்பார்மில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலும் எதிர்காலத்தில் இணையலாம் என கூறப்படுகிறது. இது 650சிசி குரூயிசர் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: வரைவு மசோதாவுக்கு அனுமதி... இந்தியாவில் அமலுக்கு வரும் பாரத் NCAP... எப்போ தெரியுமா?
புதிய ஸ்பை படங்களின் படி ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடலில் அப்சைடு டவுன் ஃபோர்க் வழங்கப்பட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது. சூப்பர் மீடியோர் 650 மாடலும் இதே ஃபோர்க் உடன் சோதனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஷாட்கன் 650 மாடலின் பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள், அலாய் வீல்கள், டியுப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன்
ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ட்ரிப்பல் நேவிகேஷன் டையல் உள்ளிட்டவையும் வழங்கப்படும் என தெரிகிறது.
என்ஜின் விவரங்கள்:
ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடலில் 648சிசி, பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்.பி. பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். புதிய ஷாட்கன் 650 இந்திய வெளியீடு பற்றி ராயல் என்பீல்டு இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.
தற்போதைய தகவல்களின் படி ராயல் என்பீல்டு நிறுவனம் அடுத்ததாக ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம். இதைத் தொடர்ந்து சூப்பர் மீடியோர் 650 இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த இரு மாடல்கள் வரிசையில், ஷாட்கன் 650 மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.