இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் உள்நாட்டு பரிசோதனை மையங்களில் தங்களின் வாகனங்களை சோதனை செய்து பார்க்க முடியும்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவில் பாரத் NCAP திட்டத்திற்கு அனுமதி கோரும் வரைவு மசோதாவுக்கு அனுமதி அளித்துள்ளார். அதன்படி இந்த திட்டம் ஏபர்ல் 1, 2023 முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்த திடத்தின் கீழ் எட்டு இருக்கைகள் மற்றும் 3.5 டன்களுக்கும் குறைந்த எடை கொண்ட பயணிகள் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட உள்ளன.
இதையும் படியுங்கள்: இந்தியாவின் டாப் 5 பாதுகாப்பான கார்கள்... உங்க கார் இருக்கானு பாருங்க...
பாதுகாப்பு சோதனையில் கார் மாடல்கள் பெறும் புள்ளிகள் அட்டபிடையில் அவற்றுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட உள்ளன. கார் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் ஏற்கனவே அமலில் இருக்கும் இந்திய விதிமுறைகள் மற்றும் டிரைவிங் நிலைகளை கருத்தில் கொண்டே நடத்தப்பட இருக்கிறது. பாரத் NCAP திட்டம் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஸ்டார் ரேட்டிங் முறை:
பாரத் NCAP பாதுகாப்பு சோதனை நுகர்வோருக்கான தளமாக செயலாற்றி வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான கார்களை அவை பெற்று இருக்கும் ஸ்டார் ரேட்டிங் கொண்டு தேர்வு செய்ய வழி வகை செய்யும். இதன் மூலம் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மத்தியில் சந்தையில் ஆரோக்கியமான போட்டி உருவாகும். பயணிகள் பாதுகாப்பு மட்டும் இன்றி, இந்திய ஆட்டோமொபைல்களின் ஏற்றுமதி தரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தான் இந்திய கார்களுக்கான ஸ்டார் ரேட்டிங் முறை அவசியமான ஒன்றாக இருக்கிறது.
இதையும் படியுங்கள்: ரூ. 4.99 லட்சம் விலையில் புது பைக் அறிமுகம்... என்னென்ன அம்சங்கள் தெரியுமா..?
சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் பாதுகாப்பு நடைமுறை விதிகள் அனைத்தையும் உள்ளடக்கி இந்திய விதிகளுக்கு ஏற்ப பாரத் NCAP பாதுகாப்பு சோதனை உருவாக இருக்கிறது. இதன் மூலம் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் உள்நாட்டு பரிசோதனை மையங்களில் தங்களின் வாகனங்களை சோதனை செய்து பார்க்க முடியும்.
இதையும் படியுங்கள்: நீண்ட ரேன்ஜ் வழங்கும் புது ஏத்தர் 450X.. வெளியீடு எப்போ தெரியுமா?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்சார்பு கொள்கையை நிலை நாட்டச் செய்வதில் பாரத் NCAP மிக முக்கிய பங்கு வகிக்கும். இதன் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தை உலகளவில் முதலிடத்தை அடைய முடியும். பாரத் NCAP பாதுகாப்பு சோதனை முறைகள் செயலற்ற பாதுகாப்பு சோதனை முறையாக இல்லாமல், இண்டர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட வாகனங்கள் மட்டும் இன்றி சி.என்.ஜி. மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மேற்கொள்ளப்பட உள்ளது.
தனித்தனி சோதனை:
மற்ற NCAP நடைமுறைகள் போன்று இல்லாமல், பாரத் NCAP பாதுகாப்பு சோதனையில் ஒருங்கிணைந்த ஒற்றஐ ஸ்டார் ரேட்டிங் மட்டுமே வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் NCAP நடைமுறைகளில் தற்போது பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் பாதுகாப்புக்கென தனித்தனி சோதனை நடத்தப்பட்டு, அதற்கான மதிப்பீடுகள் ஸ்டார் ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2030 ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் மரணங்கள் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை குறைக்க இந்தியா இலக்க நிர்ணயம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், புதிய பாரத் NCAP முறை அமலுக்கு வர உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி 2020 ஆண்டில் மட்டும் சாலை விபத்து போன்ற சம்பவங்களால் நாடு முழுக்க 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.