பட்ஜெட் விலையில் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி... ஸ்டைலிஷ் டீசர் வெளியிட்ட ஒன்பிளஸ்..!

By Kevin Kaarki  |  First Published Jun 27, 2022, 6:14 PM IST

ஸ்மார்ட் டிவி மாடல்களின் டீசர் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் மற்றும் அமேசான் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.


ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் ஒன்பிளஸ் டிவி 43 Y1S ப்ரோ மாடல் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக 50 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புது டிவிக்கான டீசரையும் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்: இனி அந்த மாதிரி எல்லாம் ஏமாற்ற முடியாது... உஷாரான இன்ஸ்டா.. அடுத்து என்ன தெரியுமா?

Tap to resize

Latest Videos

undefined

புது ஸ்மார்ட் டிவி மாடல்களின் டீசர் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் மற்றும் அமேசான் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடல்களை போன்றே புதிய ஸ்மார்ட் டிவி மாடலும் பெசல் லெஸ் டிசைன் மற்றும் 4K UHD டிஸ்ப்ளே, HDR10 சப்போர்ட் மற்றும் 24 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ சப்போர்ட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

அசத்தல் டீசர்கள் வெளியீடு:

ஒன்பிளஸ் இந்தியா மற்றும் அமேசான் இந்தியா வலைதளங்களில் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசர்களில் புது ஒன்பிளஸ் டிவி 50 Y1S  ப்ரோ அம்சங்களும் வெளியாகி உள்ளது. புது  ஒன்பிளஸ் டிவியை வாங்க விரும்புவோர், அது பற்றி அப்டேட்களை இரு வலைதளங்களில் இருந்து அறிந்து கொள்ளும் வகையில் Notify Me பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் வெளியீடு பற்றிய அப்டேட்களும் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்: ஹியரிங் ஏய்ட் அம்சம் கொண்டு உருவாகும் புது ஏர்பாட்ஸ் ப்ரோ... எதற்கு தெரியுமா..?

ஒன்பிளஸ் டிவி 50 Y1S ப்ரோ மாடலில் 50 இன்ச் 4K UHD டிஸ்ப்ளே, 10 கலர் டெப்த் வழங்கப்படுகிறது. இத்துடன் காமா என்ஜின் வழங்கப்படுகிறது. இது ரியல்-டைமில் இமேஜ் தரத்தை மேம்படுத்தும் வசதி கொண்டுள்ளது. மேலும் இந்த டிவியில் MEMC சப்போர்ட், HDR 10 சப்போர்ட், டால்பி ஆடியோ மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. முந்தைய ஒன்பிளஸ் Y சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களை போன்றே புதிய டிவியிலும் ஸ்மார்ட் மேனேஜர் அம்சம் வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: 15000mAh பேட்டரி கொண்ட புது ஸ்மார்ட்போன்... ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம்..!

புது டிவி அம்சங்கள்:

இது சிஸ்டம் ஸ்பீடு, இண்டர்னல் மெமரியை காலி செய்வது போன்ற வசதிகளை வழங்குகிறது. மேலும் புதிய ஒன்பிளஸ் 50 Y1S ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல்  24 வாட் ஸ்பீக்கர் சப்போர்ட், டால்பி ஆடியோ வசதி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. புதிய ஒன்பிளஸ் 50 Y1S ப்ரோ மாடலில் ஒன்பிளஸ் சாதனங்களை கனெக்ட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு ஒன்பிளஸ் வாட்ச் மூலம் வால்யும் கண்ட்ரோல் செய்ய முடியும். 

மேலும் ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் உள்ள ஸ்லீ டிடெக்‌ஷன் அம்சம் கொண்டு பயனர் உறங்குகிறார் என்பதை கண்டறிந்து ஒன்பிளஸ் டிவியும் தானாக ஆப் ஆகி விடும். புதிய ஸ்மார்ட் டிவி 8GB வரையிலான இண்டர்னல் மெமரி கொண்டிருக்கும் என்றும் புதிய டீசரில் தெரியவந்துள்ளது. புதிய டிவி மாடல் சரியான இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரங்கள் தொடர்ந்து மர்மமாகவே வைக்கப்பட்டு உள்ளன. 

முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் டிவி 43 Y1S ப்ரோ மாடலின் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் புதிய 50 இன்ச் மாடல் விலை இதை விட சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 

click me!