ஏற்கனவே சியோமி ஃபர்ம்வேர் அப்டேட்டர் வலைதளத்திலும் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதே தகவலை உறுதிப்படுத்தும் வகையில், ரெட்மி 10 பிரைம் பிளஸ் ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
இதையும் படியுங்கள்: ப்ளூடூத் காலிங் வசதியுடன் ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான புது ஸ்மார்ட்வாட்ச்..!
கீக்பென்ச் தகவல்களின் படி புதிய ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், மாலி G57 GPU, ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். சார்ந்த MIUI13 கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 22041219i எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சியோமி ஃபர்ம்வேர் அப்டேட்டர் வலைதளத்திலும் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி மாடலில் 4GB ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கீக்பென்ச் தளத்தில் ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சிங்கில் கோர் டெஸ்டில் 198 மதிப்பெண், மல்டி கோர் டெஸ்ட்களில் 1179 மதிப்பெண்களை பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்: 15000mAh பேட்டரி கொண்ட புது ஸ்மார்ட்போன்... ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம்..!
புதிய ரெட்மி 10 பிரைம் பிளஸ் ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11E ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் என்பதால், இதில் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், 50MP பிரைமரிகேமரா, 2MP டெப்த் சென்சார், 5MP செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இதில் அதிகபட்சமாக 128GB இண்டர்னல் மெமரி வழங்கப்படலாம். இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், 5000mAh பேட்டரி வழங்கப்படலாம்.
இதையும் படியுங்கள்: அதிரடி சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த ரியல்மி ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு தெரியுமா?
ரெட்மி நோட் 11E ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் சிம் ஸ்லாட், 6.58 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 13, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 4GB ரேம், 128GB மெமரி, 6GB ரேம், 128GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய ரெட்மி 10 பிரைம் பிளஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு, சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் இதன் இந்திய வெளியீடும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.