
லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லாவா பிளேஸ் என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன் மாடல் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய லாவா பிளேஸ் ஸ்மார்ட்போன் மாடலில் 6.51 இன்ச் HD+ IPS 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் டிசைன், மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: ரியல்மி தார் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
இத்துடன் 3ஜிபி ரேம், 3ஜிபி விர்ச்சுவல் ரேம், 64ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 13MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், மேலும் இரு சென்சார்கள், பிரீலோட் செய்யப்பட்ட கேமரா மோட்கள் மற்றும் ஃபில்ட்டர்கள், 8MP செல்பி கேமரா, ஸ்கிரீன் பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்: ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்...!
லாவா பிளேஸ் அம்சங்கள்:
- 6.51 இன்ச் HD+ IPS 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் டிசைன்
- மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.
- 3ஜிபி ரேம், 3ஜிபி விர்ச்சுவல் ரேம்
- 64ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 8MP செல்பி கேமரா, ஸ்கிரீன் பிளாஷ்
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக்
- யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 5000mAh பேட்டரி
- பேஸ் அன்லாக் வசதி
இதையும் படியுங்கள்: புது ஐபோன் 14 சீரிசில் பாரபட்சம்... இணையத்தில் லீக் ஆன அதிர்ச்சி தகவல்..!
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் புதிய லாவா பிளேஸ் ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம், 64ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிளாஸ் பிளாக், கிளாஸ் புளூ, கிளாஸ் கிரீன் மற்றும் கிளாஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை லாவா இ ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் விற்பனையாளர்களிடம் ஜூலை 14 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
புதிய லாவா பிளேஸ் ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு லாவா ப்ரோபட்ஸ் 21 பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.