ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்...!

By Kevin Kaarki  |  First Published Jul 7, 2022, 1:59 PM IST

டெக்னோ நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 


டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டெக்னோ ஸ்பார்க் 8P ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது டெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்பார்க் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். புதிய டெக்னோ ஸ்பார்க் 8P ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், 4ஜிபி ரேம், 3ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, குவால் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்: புது ஐபோன் 14 சீரிசில் பாரபட்சம்... இணையத்தில் லீக் ஆன அதிர்ச்சி தகவல்..!

Tap to resize

Latest Videos

undefined

ஆண்ட்ராய்டு 11 சார்ந்த Hiஓஎஸ் 7.6 கொண்டு இருக்கும் டெக்னோ ஸ்மார்ட்போன் IPX2 ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்: மிகக் குறைந்த விலையில் சாம்சங் 5ஜி போன்... எப்போ வெளியாகுது தெரியுமா?

டெக்னோ ஸ்பார்க் 8P அம்சங்கள்:

- 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
- மாலி-G52 2EEMC2 GPU
- 4ஜிபி LPDDR4x ரேம்
- 64ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் Hiஓஎஸ் 7.6
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா
- 2MP டெப்த் சென்சார், AI கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
- 8MP செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
- IPX2 ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் 
- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000mAh பேட்டரி
- 18 வாட் பிளாஷ் சார்ஜிங் வசதி 

இதையும் படியுங்கள்: ரூ. 109 விலையில் புது ரிசார்ஜ் பேக் அறிவித்த ஏர்டெல்..!

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

டெக்னோ ஸ்பார்க் 8P ஸ்மார்ட்போன் டர்குயிஸ் சியான், அட்லாண்டிக் புளூ, ஐரிஸ் பர்பில் மற்றும் டஹிடி கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்ோபன் டெக்னோ அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

click me!