ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சலுகைகளுடன் இலவசமாக நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்குகிறது. இதனை பெறுவது எப்படி என பார்ப்போம்.
நெட்ப்ளிக்ஸ் சேவையில் சந்தாதாரர் ஆக வேண்டுமா, இனி ரிலையன்ஸ் ஜியோ ரிசார்ஜ் செய்தாலே போதுமானது. எனினும், இந்த சலுகை போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. நெட்ப்ளிக்ஸ் சந்தா பெற வேண்டும் எனில், இது சிறந்த தேர்வாக இருக்கும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நெட்ப்ளிக்ஸ் சந்தாவை இலவசமாக வழங்கும் ஐந்து சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: மிகக் குறைந்த விலையில் சாம்சங் 5ஜி போன்... எப்போ வெளியாகுது தெரியுமா?
இவற்றின் விலை ரூ. 399, ரூ. 599, ரூ. 799, ரூ. 999 மற்றும் ரூ. 1499 ஆகும். இந்த ஐந்து சலுகைகளிலும் இலவசமாக நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது. ஐந்து சலுகைகள் வழங்கும் பலன்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இதையும் படியுங்கள்: ரூ. 109 விலையில் புது ரிசார்ஜ் பேக் அறிவித்த ஏர்டெல்..!
ரூ. 399 சலுகை:
இந்த சலுகையில் மொத்தம் 75ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் பின் ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படும். இதில் அதிகபட்சமாக 200ஜிபி வரை டேட்டா ரோல்-ஓவர் பெற முடியும். இது தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: அசுஸ் ரோக் போன் 6 இந்திய விலை அறிவிப்பு... விற்பனை எப்போ தெரியுமா?
ரூ. 499 சலுகை
ஜியோ போஸ்ட்பெயிட் ரூ. 499 சலுகையில் 100ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் பின் ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படும். இதில் அதிகபட்சமாக 200ஜிபி வரை டேட்டா ரோல்-ஓவர் பெற முடியும். இது தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.
ரூ. 799 சலுகை
ஜியோ ரூ. 799 போஸ்ட்பெயிட் சலுகையில் பயனர்களுக்கு மொத்தமாக 150ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் பின் ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படும். இதில் அதிகபட்சமாக 200ஜிபி வரை டேட்டா ரோல்-ஓவர் பெற முடியும். இது தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.
ரூ. 999 சலுகை
ஜியோ ரூ. 999 சலுகை 200 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த டேட்டா தீர்ந்து போன பின்பு பயனர் பயன்படுத்தும் ஒரு ஜிபி டேட்டாவுக்கான கட்டணம் ரூ. 10 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் அதிகபட்சம் 200ஜிபி வரை டேட்டா ரோல்-ஓவர் பெற முடியும். இது தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.
ரூ. 1499 சலுகை
ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெயிட் ரூ. 1499 சலுகை பயனர்களுக்கு 300 ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது. இதன் பின்பு பயனர் பயன்படுத்தும் ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சலுகையில் அதிகபட்சமாக 500ஜிபி வரை டேட்டா ரோல்-ஓவர் பெறும் வசதி உள்ளது. இது தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.