புது ஏர்டெல் சலுகைகள் பயனர்கள் தங்களின் மொபைல் நம்பர்களை ஆக்டிவேட் நிலையில் வைத்திருக்க உதவும் வகையில் பலன்களை கொண்டு உள்ளன.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான பாரதி ஏர்டெல் நான்கு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை ஸ்மார்ட் ரிசார்ஜ் மற்றும் ரேட் கட்டர் சலுகைகள் ஆகும். இந்த சலுகைகளில் இரண்டு காலண்டர் மாதங்களுக்கான வேலிடிட்டி மற்றும் இரண்டு சலுகைகள் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. இவற்றில் ஸ்மார்ட் ரிசார்ஜ் ஆப்ஷன்களும் இடம்பெற்று உள்ளன.
இதையும் படியுங்கள்: அசுஸ் ரோக் போன் 6 இந்திய விலை அறிவிப்பு... விற்பனை எப்போ தெரியுமா?
புது ஏர்டெல் சலுகைகளின் விலை ரூ. 140-க்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் விலை ரூ. 109-இல் இருந்து துவங்குகின்றன. இரண்டு புது ஏர்டெல் சலுகைகள் பயனர்கள் தங்களின் மொபைல் நம்பர்களை ஆக்டிவேட் நிலையில் வைத்திருக்க உதவும் வகையில் பலன்களை கொண்டு உள்ளன. புது சலுகை பலன்களை தொடர்ந்து பார்ப்போம்.
இதையும் படியுங்கள்: மாஸ் காட்டிய ஆய்வாளர்கள்.. வைரஸ் கிறுமிகளை கொன்று குவிக்கும் என்95 மாஸ்க் கண்டுபிடிப்பு..!
ஏர்டெல் ரூ. 109 திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ரூ. 109 மற்றும் ரூ. 111 விலை திட்டங்களில் ரூ. 99 விலை சலுகைகளை விட அதிக வேலிடிட்டி மற்றும் மொபைல் டேட்டா பலன்களை கொண்டு இருக்கிறது. ரூ. 109 ஏர்டெல் சலுகை 30 நாட்கள் வேலிடிட்டி, 200MB டேட்டா, ரூ. 99 டாக்டைம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையில் அழைப்புகளை மேற்கொள்ள நொடிக்கு 2.5 பைசா, லோக்கல் எஸ்.எம்.எஸ். அனுப்ப ரூ. 1 மற்றும் எஸ்.டி.டி. எஸ்.எம்.எஸ். அனுப்ப ரூ. 1.44 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.
இதையும் படியுங்கள்: ஏகப்பட்ட சலுகைகளுடன் ஒன்பிளஸ் நார்டு 2T விற்பனைக்கு வந்தது..!
ஏர்டெல் ரூ. 111 திட்டம்:
ஏர்டெல் ரூ. 111 ரிசார்ஜ் சலுகையில் ரூ. 99 டாக்டைம், 200MB டேட்டா, ஒரு மாத வேலிடிட்டி வழங்குகிறது. இதன் பலன்கள் ரூ. 109 ரேட் கட்டர் வழங்கும் பலன்களையே கொண்டுள்ளன.
ஏர்டெல் ரூ. 128 திட்டம்:
ஏர்டெல் ரூ. 128 ரேட் கட்டர் சலுகையும் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் அழைப்புகளை மேற்கொள்ள நொடிக்கு ரூ. 2.5, வீடியோ கால்களை மேற்கொள்ள நொடிக்கு ரூ. 5 மற்றும் கூடுதல் டேட்டாவின் போது MB-ஒன்றுக்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ. 131 திட்டம்:
ஏர்டெல் ரூ. 131 சலுகையும் ஒரு மாத வேலிடிட்டி கொண்டுள்ளன. இதில் உள்ளூர் அழைப்புகளை மேற்கொள்ள நொடிக்கு ரூ. 2.5 பைசா, தேசிய வீடியோ கால்களை மேற்கொள்ள ரூ. 1, தேசிய எஸ்.எம்.எஸ். அனுப்ப ரூ. 1.5 வசூலிக்கப்படும்.