அசுஸ் ரோக் போன் 6 மாடல் பேண்டம் பிளாக் மற்றும் ஸ்டாம் வைட் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 6 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வேதேச வெளியீட்டின் போதே இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமானது. புதிய அசுஸ் ரோக் போன் 6 மாடலில் 6.78 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சாம்சங் AMOLED HDR டிஸ்ப்ளே, 165Hz ரிப்ரெஷ் ரேட், 720Hz டச் சேம்ப்லிங் ரேட் கொண்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் மாடல் எனும் பெருமையை பெற்று இருக்கிறது.
இதையும் படியுங்கள்: மாஸ் காட்டிய ஆய்வாளர்கள்.. வைரஸ் கிறுமிகளை கொன்று குவிக்கும் என்95 மாஸ்க் கண்டுபிடிப்பு..!
undefined
புதிய அசுஸ் ரோக் போன் 6 மாடலில் அதிகபட்சமாக 18ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேம்பட்ட கூலிங் சிஸ்டம் கொண்டு இருக்கும் அசுஸ் ரோக் போன் 6 முதல் முறையாக IPX4 சான்று பெற்று உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 50MP பிரைமரி கேமரா, IMX766 சென்சார், 13MP 125 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, 5MP மேக்ரோ கேமரா, 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: ஏகப்பட்ட சலுகைகளுடன் ஒன்பிளஸ் நார்டு 2T விற்பனைக்கு வந்தது..!
அசுஸ் ரோக் போன் 6 அம்சங்கள்:
- 6.78 இன்ச் 2448x1080 பிக்சல் FHD+ 165Hz OLED 10-பிட் HDR 20.4:9, 720Hz டச் சாம்ப்லிங் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- அதிகபட்சம் 3.2GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் பிளஸ் பிராசஸர்
- அட்ரினோ நெக்ஸ்ட்-ஜென் GPU
- 8ஜிபி / 12ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256GB (UFS 3.1) மெமரி
- 16ஜிபி / 18ஜிபி (ரோக் போன் 6 ப்ரோ) LPDDR5 ரேம், 512 ஜிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரோக் யு.ஐ. மற்றும் ஜென் யு.ஐ.
- டூயல் சிம்
- 50MP பிரைமரி கேமரா, 1μm பிக்சல், f/1.9
- 13MP 125˚ அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
- 5MP மேக்ரோ கேமரா, f/2.0
- 12MP செல்பி கேமரா
- 3.5mm ஆடியோ ஜாக்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி
- 6000mAh பேட்டரி
- 65 வாட் பாஸ்ட் சார்ஜிங், குயிக் சார்ஜிங் 5.0
இதையும் படியுங்கள்: விரைவில் இந்தியா வரும் புதிய K சீரிஸ் போன்... ரெட்மி வெளியிட்ட சூப்பர் டீசர்..!
விலை விவரங்கள்:
அசுஸ் ரோக் போன் 6 மாடல் பேண்டம் பிளாக் மற்றும் ஸ்டாம் வைட் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 71 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரோக் போன் 6 ப்ரோ மாடல் ஸ்டாம் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 18 ஜிபி ரேம், 512ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 88 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விரைவில் துவங்கும் என அசுஸ் அறிவித்து இருக்கிறது.