அமேசான், ஒன்பிளஸ் வலைதளங்கள் மட்டுமfன்றி ஆப்லைன் விற்பனை மையங்களிலும் ஒன்பிளஸ் நார்டு 2T விற்பனை செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் தனது நார்டு 2T ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நார்டு 2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகமாகன நிலையில், ஒன்பிளஸ் நார்டு 2T விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் விற்பனை அமேசாான் தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: விரைவில் இந்தியா வரும் புதிய K சீரிஸ் போன்... ரெட்மி வெளியிட்ட சூப்பர் டீசர்..!
undefined
அமேசான், ஒன்பிளஸ் இந்தியா வலைதளங்கள் மட்டும் இன்றி ஆப்லைன் விற்பனை மையங்களிலும் ஒன்பிளஸ் நார்டு 2T விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்டு 2T ஸ்மார்ட்போன் இரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இதையும் படியுங்கள்: ஸ்மார்ட்போனுடன் இதுவும் அறிமுகமாகிறது... பயனர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் அசுஸ்?
ஒன்பிளஸ் நார்டு 2T விலை விவரங்கள்:
ஒன்பிளஸ் நார்டு 2T ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜேட் ஃபாக் மற்றும் கிரே ஷேடோ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
இதையும் படியுங்கள்: 19 நிமிடங்களில் முழு சார்ஜ்... 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகும் சியோமி ஸ்மார்ட்போன்..!
அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் புதிய நார்டு 2T ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. இதே போன்று தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி மாத தவணை முறையை தேர்வு செய்வோருக்கும் இந்த சலுகை கிடைக்கும்.
அந்த வகையில், ஒன்பிளஸ் நார்டு 2T ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 499 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 32 ஆயிரத்து 499 என்றும் குறைந்து விடும். புதிய நார்டு 2T ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்டு 2T அம்சங்கள்:
புதிய நார்டு 2T ஸ்மார்ட்போன் மாடலில் 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 6nm பிராசஸர், கிராபிக்ஸ்-க்கு ARM G77 MC9 GPU வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி மற்றும் 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1, டூயல் சிம் ஸ்லாட் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ், OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, 2MP மோனோ கேமரா, f/2.4 மற்றும் 32MP செல்பி கேமரா, f/2.4 வலழங்கப்பட்டு உள்ளது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி, 4500mAh பேட்டரி மற்றும் 80 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.