விரைவில் இந்தியா வரும் புதிய K சீரிஸ் போன்... ரெட்மி வெளியிட்ட சூப்பர் டீசர்..!

By Kevin KaarkiFirst Published Jul 5, 2022, 12:46 PM IST
Highlights

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரெட்மி K50i ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11T ப்ரோ மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். 

ரெட்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய K சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இது குறித்த தகவல் ரெட்மி இந்தியா ட்விட்டர் அக்கவுண்டில் வெளியாகி இருக்கிறது. ரெட்மி K இஸ் பேக் (Redmi K IsBack) என்ற பதிவை கொண்டே விரைவில் ரெட்மி K50i ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

இதையும் படியுங்கள்: ஸ்மார்ட்போனுடன் இதுவும் அறிமுகமாகிறது... பயனர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் அசுஸ்?

முன்னதாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெறும் ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விடும். அனைத்து ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடமும் இது பொதுவான வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரெட்மி K50i ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11T ப்ரோ மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். 

இதையும் படியுங்கள்: 19 நிமிடங்களில் முழு சார்ஜ்... 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகும் சியோமி ஸ்மார்ட்போன்..!

மே மாத வாக்கில் ரெட்மி நோட் 11t ப்ரோ ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தான் தற்போது ரெட்மி இந்தியா ட்விட்டர் தளத்தில் புது K சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியாகி இருக்கிறது. பி.ஐ.எஸ். வலைதளம் மட்டும் இன்றி ரெட்மி K50i ஸ்மார்ட்போன் விவரங்கள் ஆன்லைனில் வெளியாகி இருந்தது. 

இதையும் படியுங்கள்: 6nm பிராசஸருடன் புது மோட்டோ ஸ்மார்ட்போன்... பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்..!

ரெட்மி K50i எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.6 இன்ச் FHD+ IPS டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், 650 நிட்ஸ் பிரைட்னM்
- டால்பி விஷன் சப்போர்ட்
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர்
- அதிகபட்சம் 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- 64MP பிரைமரி கேமரா
- 8MP வைடு ஆங்கில் லென்ஸ்
- 2MP மேக்ரோ லென்ஸ்
- 16MP செல்பி கேமரா
- டால்பி அட்மோஸ் வசதி
- ஹெட்போன் ஜாக்
- MIUI13
- 5080mAh பேட்டரி
- 67 வாட் பாஸ்ட் சார்ஜிங்

இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரெட்மி K50i ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பெரும்பாலும் ரெட்மி நோட் 11T ப்ரோ மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். 

click me!