19 நிமிடங்களில் முழு சார்ஜ்... 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகும் சியோமி ஸ்மார்ட்போன்..!

By Kevin KaarkiFirst Published Jul 4, 2022, 3:09 PM IST
Highlights

இத்துடன் Mi பேண்ட் 7 ப்ரோ மற்றும் சியோமி புக் ப்ரோ 2022 மாடல்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

சியோமி நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் 12S சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒட்டி அதன் அம்சங்களை ஒவ்வொன்றாக அறிவிக்கும் டீசர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது புது டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்: 6nm பிராசஸருடன் புது மோட்டோ ஸ்மார்ட்போன்... பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்..!

அதன்படி சியோமி 12S ப்ரோ ஸ்மார்ட்போனில் 120 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் மற்றும் 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. முதற்கட்டமாக சியோமி 12S சீரிஸ் மாடல்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இத்துடன் Mi பேண்ட் 7 ப்ரோ மற்றும் சியோமி புக் ப்ரோ 2022 மாடல்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இதையும் படியுங்கள்: ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. ஐபோனுக்கு ரூ. 12 ஆயிரம் வரை விலை குறைப்பு..!

சியோமி நிறுவன தலைவர் லெய் ஜூன் வெளியிட்டு இருக்கும் டீசரில் சியோமி 12S ப்ரோ ஸ்மார்ட்போன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இறுக்கிறது. மேலும் இந்த தொழில்நுட்பம் இரண்டு மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டு ஸ்மார்ட்போனினை 19 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். 

இதையும் படியுங்கள்: 80 மணி நேர பேக்கப் கொண்ட இயர்பட்ஸ் அறிமுகம்... விலை இவ்வளவு கம்மியா?

இத்துடன் புது ஸ்மார்ட்போனில் கான்ஸ்டண்ட் டெம்பரேச்சர் மோட் வழங்கப்படுகிறது. இது சீரான வெப்ப நிலையில், ஸ்மார்ட்போனை 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும்.  இது மட்டும் இன்றி புதிய சியோமி ஸ்மார்ட்போன் 50 வாட் வயர்லெஸ் மற்றும் 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சியோமி 12S அல்ட்ரா:

சியோமி 12 ப்ரோ மட்டும் இன்றி சியோமி 12S அல்ட்ரா, சியோமி 12S ஸ்மார்ட்போன் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களில் முதல் முறையாக சியோமி 12S லெய்கா ஆப்டிக்ஸ் கொண்டு இருக்கிறது. சியோமி 12S அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலில் 1 இன்ச் அளவில் 50MP சென்சார் வழங்கப்பட இருக்கிறது. 

புதிதாக ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டும் இன்றி சியோமி Mi பேண்ட் 7 ப்ரோ மற்றும் சியோமி புக் ப்ரோ 2022 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. சியோமி புக் ப்ரோ 2022 மாடலில் 4K OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன் வழங்கப்படும் என தெரிகிறது. 

click me!