6nm பிராசஸருடன் புது மோட்டோ ஸ்மார்ட்போன்... பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்..!

By Kevin KaarkiFirst Published Jul 4, 2022, 2:36 PM IST
Highlights

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கும் புது g சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கு மூன்று ஆண்டுகள் அப்டேட் வழங்கப்படுகிறது. 

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டோ g42 மிட் ரேன்ஜ் 4ஜி போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.4 இன்ச் FHD+ AMOED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 4ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. புது மோட்டோ ஸ்மார்ட்போனிற்கு ஒரு ஆண்ட்ராய்டு அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்: ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. ஐபோனுக்கு ரூ. 12 ஆயிரம் வரை விலை குறைப்பு..!

இந்த ஸ்மார்ட்போன் PMMA அக்ரலிக் கிளாஸ் ஃபினிஷ் பாடி கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. புகைப்படங்களை 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டோ g42 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி, 20 வாட் டர்போ சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: 80 மணி நேர பேக்கப் கொண்ட இயர்பட்ஸ் அறிமுகம்... விலை இவ்வளவு கம்மியா?

மோட்டோ g42 அம்சங்கள்:

- 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ மேக்ஸ் விஷன் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் 
- அட்ரினோ 610 GPU
- 4GB LPDDR4X ரேம்
- 64GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யு.எக்ஸ்.
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8
- 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2, டெப்த் அம்சம் 
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்பி கேமரா, f/2.2
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், எப்.எம். ரேடியோ 
- பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 20 வாட் டர்போ சார்ஜிங் 

இதையும் படியுங்கள்: ரூ. 1 லட்சம் விலையில் கிடைக்கும் டாப் டக்கர் கேமரா மாடல்கள்...!

விலை விவரங்கள்:

மோட்டோ g42 ஸ்மார்ட்போன் மெட்டாலிக் ரோஸ் மற்றும் அட்லாண்டிக் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 11 ஆம் தேதி துவங்குகிறது. 

அறிமுக சலுகைகள்:

- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி

- ரூ. 2 ஆிரம் மசிப்புள்ள ரிசார்ஜ்களுக்கு கேஷ்பேக் 

- ஜீ5 சேவைக்கான வருடாந்திர சந்தாவில் ரூ. 549 தள்ளுபடி 

click me!