80 மணி நேர பேக்கப் கொண்ட இயர்பட்ஸ் அறிமுகம்... விலை இவ்வளவு கம்மியா?

By Kevin Kaarki  |  First Published Jul 4, 2022, 8:33 AM IST

நாய்ஸ் நெர்வ் ப்ரோ இயர்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக மற்றும் ஓர் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய நாய்ஸ் ஃபிளேர் XL மாடல் அதிகபட்சமாக 80 மணி நேர பிளேபேக் கொண்டுள்ளது. இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட்ட பிளேர் XL ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடல் ஆகும். இந்த இயர்பட்ஸ் சீரான கனெக்டிவிட்டி மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. 

ரூ. 1 லட்சம் விலையில் கிடைக்கும் டாப் டக்கர் கேமரா மாடல்கள்...!

Tap to resize

Latest Videos

undefined

இந்திய சந்தையில் முன்னணி லைஃப்ஸ்டைல் தொழில்நுட்ப நிறுவனமாக நாய்ஸ் விளங்குகிறது. இந்த நெக்பேண்ட் இயர்பட்ஸ் சவுகரியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இதனை பயன்படுத்தும் போது எந்த விதமான இடையூறையும் ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக நாய்ஸ் நெர்வ் ப்ரோ இயர்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக மற்றும் ஓர் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

நத்திங் போன் (1) முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற இதை செய்தால் போதும்..!

ஹைப்பர் சின்க் தொழில்நுட்பம்:

புதிய பிளேர் XL மாடலில் 10 மில்லிமீட்டர் டிரைவர்கள் உள்ளன. மேலும் இதில் ட்ரூ பேஸ் தொழில்நுட்பம் உள்ளது. இவை சிறப்பான ஆடியோ அவுட்புட் வழங்க உதவுகின்றன.இதில் உள்ள ஹைப்பர் சின்க் தொழில்நுட்பம் சாதனங்களுடன் விரைவில் கனெக்ட் மற்றும் டிஸ் கனெக்ட் ஆக செய்யும். இந்த இயர்பட்ஸ் 80 மணி நேர பேட்டரி லைஃப் வழங்குகிறது. இதை கொண்டு மூன்று நாட்களுக்கு எந்த வித இடையூறும் இன்றி இசையை அனுபவிக்க முடியும்.

கேமிங் போன்களில் முதல் முறை... அதிரடி அம்சங்களுடன் லான்ச்-க்கு ரெடியாகும் ரோக் போன் 6 சீரிஸ்..!

மேலும் இதில் இன்ஸ்டா-சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 15 மணி நேரத்திற்கான பிளே பேக் கிடைக்கும். நாய்ஸ் ஃபிளேர் XL மாடலில் IPX5 தரச் சான்று பெற்ற ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. 43 கிராம் எடை கொண்டு இருக்கும் நாய்ஸ் ஃபிளேர் XL மேக்னடிக் இயர்பட்களை கொண்டு இருக்கிறது.

நாய்ஸ் ஃபிளேர் XL அம்சங்கள்:

-  10 மில்லிமீட்டர் டிரைவர்கள்
- ட்ரூ பேஸ், ஹைப்பர் சின்க் தொழில்நுட்பங்கள
- என்விரான்மெண்டல் சவுண்ட் ரிடக்‌ஷன்
- 80 மணி நேர பேட்டரி லைஃப்
- இன்ஸ்டா-சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
- IPX5 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- மேக்னடிக் இயர்பட்ஸ்
- ப்ளூடூத் AVRCP, A2DP கனெக்டிவிட்டி

இந்த இயர்பட்ஸ்-இல் பிரத்யேகமாக கேமிங் மோட் வழங்கப்பட்டு உள்ளது. நாய்ஸ் ஃபிளேர் XL மாடல் மிஸ்ட் கிரே, ஜெட் பிளாக், பர்கண்டி மற்றும் ஸ்டோன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் நாய்ஸ் வலைதளத்தில் நடைபெறுகிறது. நாய்ஸ் ஃபிளேர் XL மாடலுக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 1,499 ஆகும். 

click me!