இந்த தேதிகளில் ஸ்மார்ட்போனை வாங்காத வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு தொகையான ரூ. 2 ஆயிரம் திரும்ப வழங்கப்படும்.
நத்திங் போன் (1) ஸ்மார்ட்போன் வெளியீடு அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு தான் நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு துவங்கியது. புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்த பயனர்கள் நத்திங் போன் (1) மாடலை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 12 ஆம் தேதியில் இருந்து ஜூலை 18 ஆம் தேதிக்குள் வாங்கிட முடியும்.
கேமிங் போன்களில் முதல் முறை... அதிரடி அம்சங்களுடன் லான்ச்-க்கு ரெடியாகும் ரோக் போன் 6 சீரிஸ்..!
undefined
ஒரு வேளை ஸ்மார்ட்போனை வாங்கும் முடிவை மாற்றிக் கொள்ளும் பட்சத்தில் ப்ளிப்கார்ட் தளத்தில் நீங்கள் செலுத்திய தொகையை திரும்ப பெறலாம். இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
அவசரம் வேண்டாம்... 2 நாள் கழிச்சும் அழிச்சுக்கோங்க... வாட்ஸ்அப் வழங்கும் புது அம்சம்...!
நத்திங் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்களின் படி நத்திங் போன் (1) மாடல் ஜூலை 12 முதல் ஜூலை 18 ஆம் தேதி வரை விற்பனைக்கு கிடைக்கும். இந்த தேதிகளில் ஸ்மார்ட்போனை வாங்காத வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு தொகையான ரூ. 2 ஆயிரம் திரும்ப வழங்கப்பட்டு விடும்.
பக்கா ஸ்கெட்ச் போட்டு பணம் பறிக்கும் ஆண்ட்ராய்டு மால்வேர்... மைக்ரோசாப்ட் வெளியிட்ட ஷாக் தகவல்..!
நத்திங் போன் (1) இந்திய விலை விவரங்கள்:
நத்திங் போன் (1) மாடலின் இந்திய விலை ரூ. 35 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் பேஸ் மாடல் 8 ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. நத்திங் போன் (1) வாங்குவதற்கு முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வுக்கு பின் தான் விற்பனைக்கு கிடைக்கும். வெளியீட்டுக்கு பின் ஒருவேளை ஸ்மார்ட்போனின் விலை அதிகமாக இருக்கும் என நீங்கள் நினைத்தாலோ அல்லது ஸ்மார்ட்போன் வாங்கும் முடிவை தவிர்த்தாலோ நீங்கள் ஸ்மார்ட்போனிற்கு முன்பதிவு செய்வதற்காக செலுத்திய ரூ. 2 ஆயிரத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். எனினும், இவ்வாறு ப்ளிப்கார்ட் தளத்தில் இருந்து பணத்தை பெற ஒரு வார காலம் வரை காத்திருக்க வேண்டும்.
மின்னஞ்சலில் தகவல்:
ஸ்மார்ட்போனை ஜூலை 18 ஆம் தேதிக்கு முன்பதிவு செய்தால் உங்களுக்கான ரீஃபண்ட் வழங்கப்பட மாட்டாது. அந்த வகையில் பயனர்கள் ஜூலை 18 ஆம் தேதிக்கு பின்பு தான் நத்திங் போன் (1) முன்பதிவில் இருந்து வெளியேற முடியும். ஜூலை 18 ஆம் தேதிக்கு பின் முன்பதிவை ரத்து செய்து முழு முன்பண தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
இது தவிர நத்திங் நிறுவனம் பணத்தை திரும்ப பெறுவது பற்றிய முழு விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என அறிவித்து இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்கள் எப்படி பணம் செலுத்தினார்களோ அதே போன்று அவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும். ஒருவேளை யுபிஐ மூலம் பணம் செலுத்தி இருந்தால், அதே யுபிஐ நம்பருக்கு பணம் அனுப்பப்படும். கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி இருந்தால் அதே கார்டுக்கு பணம் திரும்ப வழங்கப்படும்.