அவசரம் வேண்டாம்... 2 நாள் கழிச்சும் அழிச்சுக்கோங்க... வாட்ஸ்அப் வழங்கும் புது அம்சம்...!

By Kevin KaarkiFirst Published Jul 3, 2022, 8:42 PM IST
Highlights

இந்த கால அளவை ஒரு மணி நேரம், எட்டு நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் அழிக்கும் வகையில் வசதியை மேம்படுத்தி இருந்தது.

வாட்ஸ்அப் யூஸ் பண்ணும் போது, தெரியாத் தனமாக தவறான நபருக்கு மெசேஜ் அனுப்பிட்டீங்களா? இல்லை எனில் தவறான தகவல் அல்லது எழுத்துப் பிழை கொண்ட தகவலை அனுப்பி, கொஞ்ச நேரம் கழிச்சு அது தவறு என உணர்ந்து இருக்கீங்களா? நல்ல வேளையாக, வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே அனுப்பப்பட் ட மெசேஜ்களை அழித்து விடும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கு. இதை பயன்படுத்தி, பல சமயங்களில் நாம பெரிய பிரச்சினைகளில் இருந்து சிக்காமல் தப்பித்து இருப்போம். 

பக்கா ஸ்கெட்ச் போட்டு பணம் பறிக்கும் ஆண்ட்ராய்டு மால்வேர்... மைக்ரோசாப்ட் வெளியிட்ட ஷாக் தகவல்..!

ஏப்ரல் 2017 வாக்கில் வாட்ஸ்அப் தனது செயலியில் முதல் முறையாக delete for everyone அம்சத்தை அறிமுகம் செய்தது. துவக்கத்தில் இந்த அம்சம் தனி நபர்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களையும், க்ரூப்களுக்கு அனுப்பிய மெசேஜ்களை எட்டு நிமிடங்களுக்கு முன்பே அழித்து விடும் வசதியை வழங்கி இருந்தது. இதன் பின் இந்த கால அளவை ஒரு மணி நேரம், எட்டு நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் அழிக்கும் வகையில் வசதியை மேம்படுத்தி இருந்தது.

சூப்பர் ஆஃபர்கள்... மிட் ரேன்ஜ் பிரிவில் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்... விற்பனை எப்போ தெரியுமா?

கால அளவு நீட்டிப்பு:

தற்போது வரை வாட்ஸ்அப் பயனர்கள் அனுப்பும் மெசேஜ்களை அழிக்க குறிப்பிட்ட கால அளவு நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டத்திற்குள் டெக்ஸ்ட், ஆடியோ அல்லது வீடியோ போன்ற தரவுகளை அழித்துக் கொள்ள முடியும். இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் நிறுவனம் இவ்வாறு மெசேஜ்களை அழிப்பதற்கான கால அளவை நீட்டித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இனி அந்த கவலை வேண்டாம்... விரைவில் வாட்ஸ்அப் வரும் புது அம்சம்...!

புது மாற்றத்தின் படி பயனர்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை 2 நாட்கள், 12 மணி நேரத்திற்குள் அழித்துக் கொள்ளலாம். தவறான தகவல்களை அழித்து விட இது போதுமான காலம் எனலாம். இந்த அம்சம் முதற்கட்டமாக வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய அப்டேட்டில் ஒரு மணி நேரம் எட்டு நிமிடம், 16 நொடிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. வரும் வாரங்களில் நீட்டிக்கப்பட்ட கால அளவு கொண்ட அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம்.

மற்றொரு புது அம்சம்:

இது மட்டும் இன்றி வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் க்ரூப்களில் இருந்து வெளியேற புது அம்சம் ஒன்றை உருவாக்கி வருவதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது. அதில் வாச்ஸ்அப் க்ரூப்களில் இருந்து வெளியேறும் போது, அது பற்றிய தகவல் க்ரூப் அட்மினுக்கு மட்டும் நோட்டிபிகேஷன் செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது போன்ற சூழலில், பயனர்கள் க்ரூப்களில் இருந்து சத்தமின்றி வெளியேற நல் வாய்ப்பாக அமைந்து உள்ளது. 

இந்த அம்சமும் சோதனை கட்டத்திலேயே உள்ளது. வாட்ஸ்அப் தனது செயலியில் வழங்க இருக்கும் புது அம்சங்களை முதலில் பீட்டா பயனர்களுக்கு அனுப்பி, அதனை மேம்படுத்தியோ அல்லது பிழைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்பு தான் அனைவருக்கான ஸ்டேபில் வெர்ஷனில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. 

click me!