கேமிங் போன்களில் முதல் முறை... அதிரடி அம்சங்களுடன் லான்ச்-க்கு ரெடியாகும் ரோக் போன் 6 சீரிஸ்..!

By Kevin Kaarki  |  First Published Jul 3, 2022, 9:15 PM IST

புதிய அசுஸ் ரோக் போன் 6 சீரிஸ் தோற்றத்தில் முந்தைய ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரோக் போன் மாடல்களை போன்றே காட்சி அளிக்கலாம்.


அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் புதிய ரோக் போன் 6 மாடலை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த மாடலுக்கான டீசர்களில் புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் மற்றும் டிசைன் என பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளன.

அவசரம் வேண்டாம்... 2 நாள் கழிச்சும் அழிச்சுக்கோங்க... வாட்ஸ்அப் வழங்கும் புது அம்சம்...!

Tap to resize

Latest Videos

undefined

அந்த வகையில், புதிய அசுஸ் ரோக் போன் 6 சீரிஸ் தோற்றத்தில் முந்தைய ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரோக் போன் மாடல்களை போன்றே காட்சி அளிக்கும் என தெரியவந்து இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் ரெண்டர்களில் இதன் பின்புற பேனலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிவித்து உள்ளன. இதன் கேமரா மாட்யுலில் மூன்று லென்ஸ்கள் மர்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.

பக்கா ஸ்கெட்ச் போட்டு பணம் பறிக்கும் ஆண்ட்ராய்டு மால்வேர்... மைக்ரோசாப்ட் வெளியிட்ட ஷாக் தகவல்..!

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் இரண்டாவது ஸ்கிரீன் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. வலது புறத்தில் பவர் பட்டன், வால்யும் ராக்கர் மற்றும் ஏர் ட்ரிகர்கள் உள்ளன. இடது புறத்தில் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் போர்ட் மற்றும் சிம் டிரெ வழங்கப்பட்டு இருக்கிறது. கீழ்புறத்தில் மற்றும் ஓர் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட இருக்கிறது.

சூப்பர் ஆஃபர்கள்... மிட் ரேன்ஜ் பிரிவில் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்... விற்பனை எப்போ தெரியுமா?

சிறப்பம்சங்கள்:

புதிய அசுஸ் ரோக் போன் 6 சீரிசில் 6.78 இன்ச் FHD+ AMOLED பேனல், 165Hz ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. இதன் வென்னிலா மாடலின் பக்கவாட்டுகளில் மிக மெல்லிய பெசல்கள் உள்ளன. சமீபத்திய கீக்பென்ச் லிஸ்டிங்களில் வென்னிலா ரோக் போன் 6 மற்றும் ரோக் போன் 6 அல்டிமேட் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செயல்திறன் கொண்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.

அந்த வகையில் புதிய ரோக் போன் 6 சீரிசில் பேஸ் மாடல், ப்ரோ மாடல் மற்றும் அல்டிமேட் மாடல்களில் ஒற்றை வித்தியாசமாக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் 16 ஜிபி ரேம், அல்டிமேட் வேரியண்ட் அதிகபட்சமாக 18 ஜிபி ரேம் கொண்டிருக்கும். மேலும் இந்த மாடல்களில் 512 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படலாம். 

இத்துடன் 6000mAh பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசசதி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரோக் யு.ஐ. வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமராவுடன் அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ லென்ஸ் மற்றும் 12MP செல்பி கேமரா வழங்கப்பட இருக்கிறது. மேலும் IPX4 தரச் சான்று பெற்ற முதல் கேமிங் ஸ்மார்ட்போன் மாடல்களாக அசுஸ் ரோக் போன் 6 சீரிஸ் இருக்கும். 

click me!