ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. ஐபோனுக்கு ரூ. 12 ஆயிரம் வரை விலை குறைப்பு..!

By Kevin Kaarki  |  First Published Jul 4, 2022, 9:47 AM IST

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி புது மாடல்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றன. 

smartphones which got price drop in india

இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் ஸ்மார்ட்போன் மாடல்கள் புதிதாக அறிமுகமாகி கொண்டே தான் இருக்கின்றன. ஆப்பிள், சாம்சங், ஒனபிளஸ் துவங்கி பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி புது மாடல்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றன. ஒவ்வொரு முறை புது போன் அறிமுகமாகும் போதும், பழைய மாடலின் விலை குறையும். 

இதையும் படியுங்கள்: 80 மணி நேர பேக்கப் கொண்ட இயர்பட்ஸ் அறிமுகம்... விலை இவ்வளவு கம்மியா?

Tap to resize

Latest Videos

அந்த வகையில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சமீபத்தில் விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்டியலை உருவாக்கி இருக்கிறோம். இதில் சில புது ஸ்மார்ட்போன் மாடல்களும், சில பழைய மாடல்களும் இடம்பெற்று இருக்கின்றன. விலை குறைப்பு பட்டியலில் ஆப்பில் ஐபோன்களும் இடம்பெற்று உள்ளன. 

இதையும் படியுங்கள்: ரூ. 1 லட்சம் விலையில் கிடைக்கும் டாப் டக்கர் கேமரா மாடல்கள்...!

ஒன்பிளஸ் 9 5ஜி: 

இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 7 ஆயிரம் வரையிலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஃபிளாக்‌ஷிப் அம்சங்கள் நிறைந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 48MP பிரைமரி கேமரா, 4500mAh பேட்டரி கொண்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: நத்திங் போன் (1) முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற இதை செய்தால் போதும்..!

ஐபோன் 13:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு ரூ. 9 ஆயிரத்து 901 வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐபோன் 13 மாடல் 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர் கொண்டுள்ளது.

ஐபோன் 12:

ஐபோன் 12 மாடலுக்கு ரூ. 12 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 12 மாடலில் 6.7 இன்ச் 1170x2532 பிக்சல் டிஸ்ப்ளே, 64ஜிபி, 128ஜிபி, 256ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஐபோன் ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கிறது. 

ஐபோன் 13 மினி:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மினி மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இதில் 5.4 இன்ச் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, 12MP + 12MP பிரைமரி கேமரா, 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி மெமரி மாடல்களில் கிடைக்கிறது. இத்துடன் ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி M32:

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் M சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர், 48MP பிரைமரி கேமரா, 13MP செல்பி கேமரா, 128ஜிபி மெமரி, 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image