இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய லாவா பிளேஸ் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சம் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாம்சங், நோக்கியா வரிசையில் லாவா நிறுவனத்தின் மொபைல்கள் நல்ல வியாபாரம் ஆனது. அதன்பிறகு, பலவிதமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வந்ததும், லாவா படுநஷ்டமடைந்து, போன் உற்பத்தியை நிறுத்தியது.
இதனையடுத்து இந்தாண்டு மீண்டும் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உயிரூட்டம் பெற்று, தற்போது இந்தியர்களுக்காக, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், லாவா பிளேஸ் நெக்ஸ்ட் என்ற 4ஜி ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 9,299 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதி முதல் அமேசான் மற்றும் லாவா ஆன்லைன் ஷாப்பிங்கில் விற்பனைக்கு வருகிறது. மேலும், ஆஃபைலன் கடைகளிலும் விற்பனைக்கு வருகிறது.
இதன் ஆஃபர்களின் ஒரு அங்கமாக, ஸ்மார்ட்போனில் ஏதும் சரியில்லை என்றால் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாரண்டி காலம் முடியும் வரையில், ஏதாவது ரிப்பேர் ஆனால், வாடிக்கையாளர்கள் அதை வீட்டில் இருந்தபடியே சரிசெய்துகொள்ளலாம்.
லாவா பிளேஸ் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள்:
Google Message: அட்டகாசமான அப்டேட்.. இனி பேசினாலே போதும்.. மெசேஜ் டைப் ஆகி விடும்!
இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசசர் உள்ளது. 4 ஜிபி ரேம், 64ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், இன்டெர்னல் மெமரியை 3ஜிபி வரையில் எக்ஸ்டென்ட் செய்துகொள்ளலாம். 6.5 இன்ச் திரையுடன் HD+ ரெசொல்யூசன், IPS ஸ்கிரீன் உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரையில், பின்பக்கத்தில் 13 மெகா பிக்சலுடன் கூடிய ட்ரிபிள் கேமரா உள்ளது. 2 மெகா பிக்சல் கூடுதல் கேமரா, வெளிச்சத்திற்கு LED லைட் ஆகியவையும் உள்ளன. முன்பக்கத்தில் செல்ஃபி போட்டோ வீடியோவுக்காக 8 மெகா பிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
5000mAh சக்தி கொண்ட பேட்டரியும் அதற்கு ஏற்ப சார்ஜரும் உள்ளன. 32 மணி நேரம் வரையில் சார்ஜ் நிற்கும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றபடி வழக்கமான வைஃபை, டைப் C USB, ப்ளூடூத் v5.0, 3.5mm ஹெட்செட் ஆடியோ போர்ட் உள்ளன.