Black Friday: அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் எல்லாவற்றிலும் ஆஃபர் மழை!

By Dinesh TG  |  First Published Nov 25, 2022, 4:29 PM IST

அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ மார்ட், டாட்டா க்ரோமா என எல்லாவற்றிலும் பிளாக் ப்ரை டே சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது. இதில் உள்ள சில ஆஃபர் விவரங்களை இங்குக் காணலாம்.


ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஷாப்பிங் கலாச்சாரத்தில் பிளாக் ப்ரைடே (Black Friday) ஆஃபர்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பிளாக் ப்ரைடே சேல் தொடங்கியுள்ளது. 

Amazon Black Friday Sale 2022:

Tap to resize

Latest Videos

அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் சர்வதேச பிராண்டு வகைகளுக்கு 70 சதவீதம் வரையில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேக்யூம் கிளினர், கிச்சன் பயன்பாட்டு பொருட்களுக்கு 50% வரை ஆஃபர்களும், ஆடை வகைகளுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆஃபர் விவரங்களுக்கு https://www.amazon.in என்ற அமேசானின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பார்க்கலாம்.

Flipkart Black Friday Sale 2022:

பிளிப்கார்ட்டில் பிளாக் ப்ரை டே விற்பனையில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 42 இன்ச் Infinix Full Hd டிவிக்கு சுமார் 11 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி உள்ளது. சிட்டி பேங்க், ஐசிஐசிஐ, கோட்டாக் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 12 சதவீதம் வரையில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Reliance Digital Black Friday Sale 2022:

ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்திலும் ஸ்மார்ட்போன்கள், டிவிகள், ஹெட்போன், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு நல்ல ஆஃபர்கள் உள்ளது. மேலும், பொருட்களுக்கு ஏற்றவாறு 20 ஆயிரம் ரூபாய் வரையில் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி 2,500 வரையில் தள்ளுபடி பெறலாம்.

Amazon Offer: ஷாவ்மி ஸ்மார்ட்போனகளுக்கு ரூ.12 ஆயிரம் வரை ஆஃபர்!

Jiomart Black Friday Sale 2022:

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல சரக்கு ஷாப்பிங் தளமான ஜியோ மார்ட்டிலும், காய்கறி முதல், வீட்டு உபயோகப் பொருட்கள் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஊர்களில் உள்ள ஜியோ மார்ட், ஜியோ மால் கடைகளிலும் இதே ஆஃபர்கள் உள்ளன. நேரில் சென்று, நல்ல பொருட்களை தொட்டுப் பார்த்து வாங்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாகும். 

Croma Black Friday Sale 2022:

டாட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான க்ரோமா ஆன்லைன் ஷாப்பிங்கிலும் ஓரளவுக்கு நல்ல ஆஃபர்கள் உள்ளன. இங்கு மட்டும் பிளாக் ப்ரைடே சேல் விற்பனையானது கடந்த 18 ஆம் தேதியே தொடங்கிவிட்டது. குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் க்ரோமா ஆஃப்லைன் ஸ்டோர்கள் உள்ளன. மேலும், க்ரோமாவின் சொந்த தயாரிப்புகளும் சிலவை உள்ளன. கிட்டில், டிவி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்ற்வை க்ரோமா தரப்பில் உருவானவை.

click me!