Google Message: அட்டகாசமான அப்டேட்.. இனி பேசினாலே போதும்.. மெசேஜ் டைப் ஆகி விடும்!

By Dinesh TG  |  First Published Nov 25, 2022, 3:28 PM IST

கூகுள் மெசேஜ் செயலியில் புதிதாக வரவுள்ள இரண்டு அப்டேட்டுகள் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் முக்கியமாக மெசேஜ் அனுப்பும் விததத்தை எளிமையாக்கும் நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது.


கூகுள் நிறுவனம் பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் புதுப்புது தொழில்நுட்பங்களை கொண்டு வருகிறது. கூகுள் மேப்பில் தொடங்கி, கூகுள் அசிஸ்டெண்ட் வரையில், முழுக்க முழுக்க வாழ்க்கை வசதிக்கு தேவையான அனைத்தும் அதில் உள்ளன. அந்த வகையில், தற்போது கூகுள் மெசேஜ் செயலியில் புதிதாக இரண்டு விதமான நுட்பங்கள் கொண்டு வரப்படுகிறது. 

1. வாய்ஸ் மெசேஜில் புதிய மாற்றம்

Latest Videos

undefined

கூகுள் மெசேஜ் செயலியில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாலே, நாம் பேசிய வார்த்தைகள் எழுத்துக்களாக மாற்றப்பட்டு மெசேஜாக மாறிவிடும். எதிர்முனையில் உள்ளவர் அதை மெசேஜாகவும் படிக்கலாம், அல்லது ஆடியோவாகவும் கேட்கலாம். இதன் மூலம் இனி ஒருவருக்கு மெசேஜ் அனுப்பும் போது, ‘மைக்’ ஆப்ஷனை கிளிக் செய்து வாய்ஸ் மெசேஜாக பதிவு செய்யலாம். பின்பு, அதில் Transcribe என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால், நீங்கள் பேசியவை அனைத்தும், அப்படியே எழுத்துக்களாக டைப் செய்யப்படும். 

கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போனிலும், ஆப்பிள் ஐபோன்களிலும் இதுபோன்ற அம்சம் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டது. கூகுளைப் பொறுத்தவரையில் வாய்ஸ் மெசேஜை எழுத்துக்களாக மாற்றும் அம்சம் முக்கியமான மொழிகளுக்கு கிடைக்கிறது. ஆங்கிலத்தில் சர்வசாதாரணமாக எழுத்துமாற்றம் செய்கிறது. தமிழ் மொழிக்கும் கிட்டத்தட்ட சரியான வார்த்தைகள் வந்துவிடுவதாக கூறப்படுகிறது.

இனி இஷ்டத்துக்கு Google Pay, Phone Pe பயன்படுத்த முடியாது!


2. ரியாக்ஷன் அனுப்பலாம்

வாட்ஸ்அப், டெலகிராம் போன் செயலிகளில் உள்ளதைப் போலவே, கூகுள் மெசேஜ் செயலியிலும் ‘ரியாக்ஷன்’ அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. உங்களுக்கு வரும் மெசேஜ்க்கு நீங்கள் ‘ரியாக்ஷன்’ எமோஜிகளை பதில்களாக அனுப்பலாம். இதற்காக எக்கச்சக்க எமோஜிகள் உட்புகுத்தப்பட்டுள்ளன. பயனர்கள் தங்களுக்குத் தேவையான எமோஜிகளை அதில் இருந்து தேர்வு செய்து அனுப்பலாம். 

இந்த இரண்டு அப்டேட்டுகளும் பயனர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று Google Message அப்டேட் செய்து கொள்ளலாம். 
 

click me!