மீண்டும் புத்துயிர் பெறும் லாவா நிறுவனம்.. விரைவில் Lava Blaze 5G அறிமுகம்!

By Dinesh TG  |  First Published Nov 4, 2022, 11:07 PM IST

பிரபல இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா தற்போது புதிதாக Lava Blaze 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கே காண்போம்.
 


ரியல்மி, ஒப்போ போன்ற ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு முன்பு சாம்சங் நிறுவனத்திற்குப் போட்டியாக லாவா, கார்பன் உள்ளிட்ட போன்கள் இருந்தன. பின்பு படுநஷ்டமடைந்து ஓய்ந்து போனது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் இந்திய மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் நடைபெற்ற 5ஜி அறிமுக விழாவில், லாவா நிறுவனம் புதிதாக 5ஜி ஸ்மார்ட்போனை டீஸ் செய்தது. 

அதன்படி, தற்போது லாவா பிளேஸ் 5ஜி என்ற ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 7ம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான லாவா ப்ளேஸை ஒத்ததாக உள்ளது.

Tap to resize

Latest Videos

இதன் விலை விவரங்கள் நவம்பர் 7 ஆம் தேதி லாவா நிறுவனம் வெளியிடும். இருப்பினும் லாவா நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரின்படி, லாவா பிளேஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.

சிறப்பம்சங்கள் :

லாவா ப்ளேஸ் 5ஜி யில் 6.5 இன்ச் HD+ டிஸ்பிளேயுடன் 720x1600 பிக்சல் ரிசொல்யூஷன் , ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ A 22 சிப்சட், 3 GB ரேமுடன் 64 GB மெமரி போன்ற அம்சங்கள் உள்ளன.

Realme 10 விரைவில் அறிமுகம் !

இது ஆண்ட்ராய்டு 12 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட் போனில் 13 MP பின்புற கேமராவுடன் மூன்று கேமராக்கள் உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ கால் செய்வதற்காக முன்புறத்தில் 8 MP கேமரா உள்ளது. ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.

ஒட்டுமொத்தத்தில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும், அதுவும் இந்திய தயாரிப்பிலான ஸ்மார்ட்போன் வேண்டும் என்பவர்கள் இந்த லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்கலாம். நவம்பர் 7 ஆம் தேதி அமேசானில் விற்பனைக்கு வந்ததும் அறிமுக சலுகைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!