குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார்

By karthikeyan V  |  First Published Nov 4, 2022, 1:41 PM IST

புதுடெல்லியில் வரும் 29ம் தேதி தொடங்கும் கார்னெகி இந்தியா குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாடு 2022-ல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். 


புதுடெல்லியில் வரும் 29ம் தேதி தொடங்கும் கார்னெகி இந்தியா குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாடு 2022-ல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சிறப்பு உரையாற்றுகிறார். குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டின் முதல் நாளில் இந்தியாவின் ஜி20 ஷெர்பா அமிதாப் கான்ட் உடன் ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார். 

இந்த உச்சிமாநாட்டின் முதல் நாள் தலைப்பு இந்தியாவின் டிஜிட்டல் பாதை என்பதாகும். 

Tap to resize

Latest Videos

டிஜிட்டல் அடையாளங்கள், சுகாதார அணுகலை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் கட்டமைப்பு, உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக டிஜிட்டல் பொதுப்பொருட்களை உருவாக்குவதற்கான பார்ட்னர்ஷிப்புகள், இந்தியாவின் ஜி20 நிகழ்ச்சிநிரலை வடிவமைத்தல் ஆகிய விஷயங்கள் குறித்து உரையாடல்கள் நடக்கவுள்ளன. 

டிஜிட்டல் சமூகத்துக்கான அடித்தள கட்டமைப்புகள், டிஜிட்டல் சுகாதார தீர்வுகள்: நிலையான ஹெல்த்கேர் டெலிவரிக்கான பாதை, சைபர் எதிர்ப்பு: இண்டர்நெட் கட்டமைப்பின் பாதுகாப்பு, நாம் வாழும் உலகம் உள்ளிட்ட பல குழுக்களும் அடங்கும். 

குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டின் முதல் நாளில் உரையாற்றுபவர்களின் விவரம்: சி.ராஜா மோகன் (ஆசிய சொசைட்டி கொள்கை நெட்வொர்க்கின் சீனியர் உறுப்பினர்), நிவ்ருத்தி ராய் (இண்டெல் இந்தியாவின் இந்திய தலைமை, இண்டெல் கார்ப்பரேஷனின் துணை தலைவர்), ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (இந்திய அரசுக்கான ஜி20 தலைமை ஒருங்கிணைப்பாளர்), கீஸோம் மசாலி (யு.என்.டி.பி தலைமை டிஜிட்டல் அலுவலகத்தின் டிஜிட்டல் நிரலாக்க தலைவர்), ஆர்.எஸ்.ஷர்மா (தேசிய சுகாதார ஆணையத்தின் சி.இ.ஓ), அமன்தீப் சிங் கில் (ஐ.நா-வின் டெக்னாலஜிக்கான தலைமை தூதர்), மார்கஸ் பார்ட்லி ஜான்ஸ்(மைக்ரோசாஃப்ட் ஆசியாவிற்கான இயக்குநர்).

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து கார்னெகி இந்தியா நடத்தும் வருடாந்திர ஃப்ளாக்‌ஷிப், குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாடு ஆகும். உலகளவிலான தொழில்துறை நிபுணர்கள், தொழிலதிபர்கள், ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் என பலதரப்பினரும் டெக்னாலஜியின் ஜியோபாலிடிக்ஸ் என்ற தலைப்பில் உரைநிகழ்த்துகின்றனர்.

பொது அமர்வுகளில் இந்தியா மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள், பேனல்கள், முக்கியமான உரைகள் மற்றும் அரசு, தொழில்துறை, கல்வித்துறை, சிவில் சமூக பிரதிநிதிகளுடனான உரையாடல்கள் ஆகியவையும் அடங்கும். 

ஆன்லைனில் பதிவு செய்து குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டில் மெய்நிகராக மக்களும் கலந்துகொள்ள முடியும்.
 

click me!