WhatsApp செயலியில் விரைவில் சிறிய மாற்றம்!

By Dinesh TG  |  First Published Nov 4, 2022, 1:30 PM IST

வாட்ஸ்அப் செயலியில் டைமர் மெமேசஜ் அம்சத்தில் புதிதாக டிசைன் மாற்றப்படுகிறது. இது பயனர்களுக்கு எந்தளவு பயனுள்ளதாக இருக்கும், அடுத்தடுத்து வரக்கூடிய அப்டேட்டுகள் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 
 


மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரி நேற்று வியாழனன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டார். அதில் வாட்ஸ்அப் செயலியில் அடுத்தடுத்து எந்தவிதமான மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது என்பதை விளக்கமளித்தார். அதன்படி, வாட்ஸ்அப்பில் கம்யூனிட்டி வசதி வரவுள்ளது, அதற்கு கீழ் குரூப்களை மேலாண்மை செய்யும் வசதி, மெசேஜ்களை அனுப்பிய பிறகு அதை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் அம்சம் வரவுள்ளன. 

இந்த நிலையில், தற்போது மெசேஜ்களை தானாக டெலிட் செய்யும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு டைமர் மெசேஜ் என்று பெயரிடப்பட்டிருந்தது. அது Disappearing Message என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதன் டிசைனும் மாற்றப்படுகிறது. இந்த புதிய டிசைன் தற்போது உருவாக்கப் பணியில் இருப்பதாகவும், விரைவில் வாட்ஸ்அப் பீட்டா 2.22.24.6 பதிப்பு செயலியில் வரும் என்றும் கூறப்படுகிறது. 

Latest Videos

undefined

WhatsApp Update: வாட்ஸ்அப்பில் புதிய வசதிகளை அறிமுகம் செய்தார் மார்க் சக்கர்பெர்க்!

வாட்ஸ்அப்பில் டைமர் மெசேஜை ஆன் செய்வதற்கு, WhatsApp Settings > Privacy > Default Message Timer என்ற வகையில் செல்ல வேண்டும். இந்த செட்டிங்ஸ் மாற்றப்படுமா என்பது குறித்த விவரங்கள் வரவில்லை. மேலும் வாட்ஸ்அப் குரூப்பில் இனி 1024 பேர் வரையில் சேர்க்கலாம், வீடியோ காலில் 32 பேர் வரை இணையும் வசதியும் கொண்டு வரப்படுகிறது. 

வாட்ஸ்அப்பில் தற்போது கொண்டு வரப்படும் அம்சங்களில் பெரும்பாலானாவை ஏற்கெனவே டெலிகிராம் செயலியில் உள்ளது. டெலிகிராமில் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போட்டியை சமாளிப்பதற்காக வாட்ஸ்அப்பும் பல அம்சங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. 

click me!