உங்க ஏரியாவில் ஜியோ 5ஜி இருந்தும் 5ஜி கிடைக்கலையா? காரணம் இதுதான்

By Dinesh TG  |  First Published Nov 3, 2022, 11:18 PM IST

ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜியோ 5ஜி சேவை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்குக் காணலாம்.
 


ஜியோ 5ஜி தற்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் வாரணாசியில் கிடைக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள் முக்கிய நகரங்களுக்கும், அடுத்த ஆண்டில் எல்லா நகரங்களிலும் 5ஜி சேவையை கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஜியோ 5ஜி சேவை உங்கள் பகுதிக்கு வந்ததும், நீங்கள் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருந்தால், 5ஜி சேவையை அனுபவப்பதற்கான அழைப்பை பெறுவீர்கள். இருப்பினும், எல்லா 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் இந்த அழைப்பு கிடைக்காது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

Tap to resize

Latest Videos

ஜியோ நிறுவனத்தின் அறிவுறுத்தல்களின்படி, ஜியோ 5ஜி சேவையைப் பெறுவதற்கு தனியாக 5ஜி சிம் வாங்க வேண்டிய தேவையில்லை. உங்கள் 4ஜி சிம் கார்டே 5ஜி ஆக மாறிவிடும். எனவே, உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போனும், அதில் ஜியோவுக்கான 5ஜி பேண்ட் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். 

மேலும், ஜியோவில் குறைந்தது 239 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பிளானில் சந்தாதாரராக இருக்க வேண்டும். 239 ரூபாய்க்கு குறைவான பிளானில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 5ஜி சேவைக்கான அழைப்பு கிடைக்காது. 

ஒரே மாதத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் Airtel 5G சேவைக்கு மாறினர்!

இதேபோல் தற்போது எல்லா 5ஜி ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி கிடைக்காது. 5ஜி சேவையைப் பெறுவதற்கான சாப்ட்வேர் அப்டேட் வழங்குவதற்கு ஜியோ நிறுவனம் அந்தந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. 

எனவே, நீங்கள் https://www.jio.com என்ற ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது ஜியோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு, உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி சேவை பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். 

மேலும், உங்கள் பகுதியில் 5ஜி சேவை உள்ளதா, நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனில் ஜியோ 5ஜிக்கான பேண்ட் அலைவரிசை உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். இவை அனைத்தும் இருக்கும்பட்சத்தில், ஜியோ 5ஜி சேவையைப் பெறுவதற்கான அழைப்பை நீங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

click me!