டுவிட்டருக்குப் போட்டியாக முன்னேறி வரும் Koo செயலி! புதிய வசதிகள் அறிமுகம்!!

By Dinesh TG  |  First Published Nov 11, 2022, 4:14 PM IST

டுவிட்டரில் பரபரப்பான மாற்றங்கள் நடந்து வரும் நிலையில், டுவிட்டருக்குப் போட்டியாக இந்தியாவின் Koo செயலியில் பல அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.


டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு பல அதிரடி மாற்றங்கள், திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 8 டாலர் கட்டணத்தில் அனைவருக்கும் ப்ளூ டிக் குறியீடு வழங்கப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் இந்தியாவிலும் கட்டண அடிப்படையிலான டுவிட்டர் திட்டம் வரவுள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தில், Koo என்ற இந்திய செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையில் அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. Koo என்பது கிட்டத்தட்ட டுவிட்டரைப் போலவே இருக்கும் சாராம்சமும்,ஷேர் சேட் போன்ற அமைப்புடனும் இருக்கும் செயலியாகும். 

Tap to resize

Latest Videos

இதில் தற்போது 10 விதமான ப்ரொபைல் பிக்சர்களை வைக்கும் வசதி, குறிப்பிட்ட நேரத்தில் கூ அனுப்பும்படி நேரத்தை அமைக்கும் வசதி, வரைவுகளைச் சேமிக்கவும் & கூ செயல்பாட்டைச் சேமிப்பதற்குமான அம்சம் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து கூவின் நிறுவனத்தின் இணை நிறுவனர் மயங்க் பிடவட்கா கூறுகையில், “பயனர்கள் 10 சுயவிவரப் படங்கள் வரை பதிவேற்றுவதற்கு உதவுகிறோம். 

பவர் கிரியேட்டர்கள் இப்போது வரைவைச் சேமித்து, எதிர்கால தேதி மற்றும் நேரத்திற்கான கூஸைத் திட்டமிடுவதை நாங்கள் மிகவும் எளிதாக்கியுள்ளோம். கூ செயல்பாட்டைச் சேமிக்கும் அம்சம் ஒரு புதிய அம்சமாகும். இது வேறு எந்த சிறிய சமூகஊடகத்திலும். இதற்கு மத்தியில் கூ செயலியில் பயனர்களின் எண்ணிக்கை 50 மில்லியனைத் தாண்டியுள்ளது’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 அதன் விவரங்கள்:

10 சுயவிவரப் படங்கள் (Profile Picture):

பயனர்கள் இப்போது 10 சுயவிவரப் படங்கள் வரை பதிவேற்றலாம். பயனரின் சுயவிவரத்தை யாராவது பார்வையிடும்போது இந்தப் படங்கள் தானாக இயங்கும். டிராக் செய்து இந்தப் படங்களின் வரிசையை எளிதாக மாற்றலாம். 

ஒரு கூவைத் திட்டமிடுங்கள்:

கூ பவர் கிரியேட்டர்கள் இப்போது குறிப்பிட்ட நேரத்திற்கு கூவை அனுப்பும் வகையில், எதிர்கால தேதி மற்றும் நேரத்தைத் திட்டமிடலாம். ஒரே நேரத்தில் பலவற்றை எழுத விரும்பும் கிரியேட்டர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். மேலும், அவ்வறாறு நேரத்தை குறிப்பிட்ட கூவை பயனர்கள் திருத்தலாம் அல்லது மீண்டும் திட்டமிடலாம்.

PhonePe: இனி குழப்பம் இல்லை.. ஆதார் கார்டு நம்பர் வைத்தே இதை செய்யலாம்!

டிராப்ட் சேமிக்கவும்:

ஒரு டிராப்ட்டை பதிவிடுவதற்கு முன் தொடர்ந்து வேலை செய்ய விரும்பும் படைப்பாளிகள், அந்த மெசேஜை சேமிக்கும் முறையைப் பயன்படுத்தலாம். கூவை பதிவிடுவதற்கு முன்பு அவற்றை திருத்தம் செய்யலாம். 

ஒரு கூவை சேமிக்கவும்:

லைக், கமெண்ட், ரீ-கூ அல்லது ஷேர் போன்ற வழக்கமான விஷயங்களுக்குப் பதிலாக இப்போது பயனர்கள் கூவைச் சேமிக்கலாம். சேமித்தவையானது பயனர்களுக்கு மட்டுமே தெரியும், மேலும், அவர்களின் சுயவிவரப் பக்கத்தில் கிடைக்கும்.

click me!