ஜியோ 4ஜி பிளான்களில் விரைவில் கட்டண உயர்வு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் கட்டண உயர்வு அறிவித்த பின்னரே ஜியோவும் ரீசார்ஜ் கட்டணத்தை அறிவிக்கும். ஆனால், இந்தாண்டு அதற்கு நேர் மாறாக ஜியோவில் கட்டண உயர்வு விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ராய் (TRAI) எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர்கள், வருவாய் குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன்படி, வோடபோன் ஐடியா, ஏர்டெல்லை காட்டிலும் ஜியோ நிறுவனம் அதிக வருமானம் ஈட்டியுள்ளது. அறிக்கையின்படி, ஜியோ நிறுவனம் சுமார் 4279 கோடி வருவாயும், ஏர்டெல் நிறுவனம் 2179 கோடி வருவாயும் ஈட்டியுள்ளது. ஏர்டெலை விட இருமடங்கு லாபத்தை ஜியோ பெற்றுள்ளது.
இருப்பினும், ARPU எனப்படும் சராசரியாக ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் வருவாயைப் பொறுத்தே கட்டண உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. அந்தவகையில், ஜியோவின் ARPU 108 ரூபாய் என்றும், ஏர்டெல் நிறுவனத்தின் ARPU 190 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜியோ நிறுவனத்தில் ஒட்டுமொத்த வருவாய் லாபம் அதிகமாக இருந்தாலும், ஒரு பயனரிடம் இருந்து கிடைக்கும் வருவாய் குறைவாகவே உள்ளது. ஏர்டெலில் ARPU வருவாயில் நல்ல இடத்தில் உள்ளது.
இந்த ARPU வருவாயை வைத்து தான் ஒவ்வொரு ஆண்டும் கட்டண உயர்வு செய்யப்படுகிறது. எனவே, ஜியோவின் ARPU வருவாய் குறைவாக இருப்பதால், விரைவில் ஜியோவில் விரைவில் கட்டண உயர்வு கொண்டு வர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அல்லது ஏர்டெல், வோடபோன் ஐடியாவில் எந்த விதமான கட்டண உயர்வும் இல்லாமல், சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கலாம். இதுதொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கு எப்போது Twitter Blue வரும்? Elon Musk பதில்
தற்போது 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த விலை உயர்வையும் 5ஜி பிளானில் திணிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கெனவே, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் இணைந்துள்ளனர். இருப்பினும் ஏர்டெல்லைக் காட்டிலும் ஜியோவின் 5ஜி வேகம் பன்மடங்கு செயல்திறன் வாய்ந்ததாக இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.