உங்கள் முதல் பாட்காஸ்ட்டை வெறும் 1 மணி நேரத்தில் தொடங்கலாம்! எப்படி என்று தெரிந்துகொண்டு ரசிகர்களை கவருங்கள்!

By karthikeyan V  |  First Published Nov 7, 2022, 11:29 AM IST

நீங்கள் ஒரு படைப்பாளியாக இருந்து, உங்கள் குரலை அனைவரும் கேட்க விரும்பினால், பாட்காஸ்டைத் தொடங்குவதற்கான சிறந்த தளம் ”Anchor by Spotify” ஆகும். இது பயன்படுத்துவதற்கு மிக எளிதானது மற்றும் இலவசமானது.


பாட்காஸ்ட் தொடங்குவது நீங்கள் நினைக்குமளவிற்கு கஷ்டம் கிடையாது; எளிதுதான். பாட்காஸ்டிங்கிற்கு உயர்தர சாதனங்கள், ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவு, ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஆகியவை எல்லாம் தேவை என நினைத்து பலரும் பயப்படுகின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால், வெறும் ஒரு மணி நேரத்தில் பாட்காஸ்ட்டை செட்டப் செய்துவிடலாம். பாட்காஸ்ட் தொடங்குவதற்கு ஒரு ஸ்மார்ட்ஃபோனுடன், மனதிலிருந்து பேசும் ஆர்வம் மட்டும் போதும்.

Tap to resize

Latest Videos

நீங்கள் ஒரு படைப்பாளியாக இருந்து, உங்கள் குரலை அனைவரும் கேட்க விரும்பினால், பாட்காஸ்டைத் தொடங்குவதற்கான சிறந்த தளம் ”Anchor by Spotify” ஆகும். இது பயன்படுத்துவதற்கு மிக எளிதானது மற்றும் இலவசமானது.

தொகுப்பாளர் ஸ்மார்ஃப்ட்ஃபோனில் ஆடியோவை ரெக்கார்ட் செய்யலாம். கிரியேட்டர்கள் அவர்கள் கேள்வி - பதில்

உரையாடல், கருத்துக்கணிப்புகள், பாட்காஸ்ட்டுகளை நேரடியாக ஸ்பாட்டிஃபை-யில் நேரடியாக பப்ளிஷ் செய்யலாம். பார்வையாளர்களை அதிகரிக்க பகுப்பாய்வுகளை அணுகவும் முடியும்.

உங்களது முதல் பாட்காஸ்ட்டை ஸ்பாட்டிஃபை மூலம் எப்படி ரெக்கார்ட் செய்யலாம் என்பதை விரிவாக பார்ப்போம்.

தொடங்குதல்: சரியான தலைப்பை தேர்வு செய்தல்

சிறந்த ஐடியாவிலிருந்துதான் சிறந்த பாட்காஸ்ட் உருவாகிறது. பாட்காஸ்ட்டை தொடங்கும் முன், எது தொடர்பான நிகழ்ச்சி, உண்மையாகவே உங்களுக்கு அதில் ஆர்வம் உள்ளதா என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டும்.

அடுத்ததாக, நிகழ்ச்சியின் ஃபார்மட்டை முடிவு செய்ய வேண்டும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம், விருந்தினரை நேர்காணல் செய்யலாம், பார்வையாளர்களிடமிருந்து கேள்விகளை பெறலாம். உங்கள் முதல் பாட்காஸ்ட்டுக்குத்தான் இந்த ஃபார்மட்டை முடிவு செய்யவேண்டும். அதன்பின்னர்

அடுத்தடுத்த பாட்காஸ்ட்டுகளுக்கு ஃபார்மட்டை மாற்றிக்கொள்ளலாம்.

அதிகமானோரை கவர, உங்களது நிகழ்ச்சி தனித்துவமிக்கதாக இருக்க வேண்டும். இதுகுறித்து உங்களுக்கு அடிப்படை ஐடியா வேண்டுமென்றால், மைடியர் மா கா பா, தி புக் ஷோ, ஆர்ஜே ஆனந்தியின் ரஃப் நோட், டைம்பாஸ் வித் தாஸ் ஆகிய பாட்காஸ்ட்டுகளை பாருங்கள்.

பட்டனை நகர்த்தி ரெக்கார்ட் செய்யவும்

ஸ்பாட்டிஃபையில் ஆங்கருடன் உங்கள் பாட்காஸ்ட்டை ரெக்கார்ட் செய்வது சந்தோஷமாகவும் ஜாலியாகவும் இருக்கும். ஸ்பாட்டிஃபை ஆப்-ஐ டவுன்லோட் செய்து பதிவு செய்துகொள்ளவும். அந்த ஆப்-பிற்கு நீங்கள் பழக்கப்பட்டபின், உங்கள் எபிசோட்களில் ஆடியோவை சேர்த்துக்கொள்ளலாம். அவ்வளவுதான்.. மிக எளிது.

பின்னணி இசை சேர்த்து உங்கள் பாட்காஸ்ட்டின் சுவாரஸ்யத்தை கூட்டுங்கள். காமெடி, கிரைம் திரில்லர் என அனைத்துவிதமான சூழலுக்கு ஏற்ற ஒலிகளும் "Anchor by Spotify"-ல் உள்ளது. நீங்கள் 10 உபதொகுப்பாளர்கள் வரை சேர்த்துக்கொள்ளலாம். அந்த வசதியும் உள்ளது.

உங்கள் பாட்காஸ்ட்டை பதிவிடுங்கள்

உங்களது முதல் பாட்காஸ்ட்டை ரெக்கார்ட் செய்த பின் பப்ளிஷ் செய்யவும். "Anchor by Spotify"-ன் சிறந்த அம்சம் என்னவென்றால், உங்கள் பாட்காஸ்ட்டை ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட அனைத்து ஆடியோ தளங்களிலும் பதிவிடலாம்.

ஆர்.எஸ்.எஸ் ஃபீட் தொடங்கி உங்கள் பாட்காஸ்ட் குறித்த ஒரு வார்த்தையை பதிவிட்டு பரப்பலாம். நீங்கள் பாட்காஸ்ட்டை ஒருமுறை மட்டும் விநியோகிக்க வேண்டும். அதன்பின்னர் உங்கள் எதிர்கால எபிசோட்களை ஒரே நகர்த்தலில் ஒத்திசைக்க முடியும்.

உங்கள் பாட்காஸ்ட்டை ப்ரமோட் செய்வதற்கு வேறு சில வழிகளும் உள்ளன. ஆன்கர் ப்ரொஃபைல் லிங்க்கை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருக்கு பகிரலாம். உங்கள் பாட்காஸ்ட்டை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாகவும் பகிரலாம்.

உங்கள் பார்வையாளர்களுடன் தொடர்பில் இருங்கள்

பாட்காஸ்ட்டை சாதாரணமாக வைத்திருப்பது உங்கள் பார்வையாளர்களுடன் இணைப்பில் இருப்பதற்கான வழியாகும். கேள்வி - பதில் மற்றும் கருத்துக்கணிப்புகளை நடத்தலாம்.

கிரியேட்டர்கள் ரசிகர்களிடம் கேள்விகளை கேட்டு அவற்றை எந்த எபிசோட்களிலும் சேர்க்கலாம். பார்வையாளர்கள் ஸ்பாட்டிஃபையில் பதிலளிக்கலாம். அனைவரும் பார்க்கும்படியும் செய்யலாம்.

பகுப்பாய்வுடன் முன்னணியில் இருங்கள்

உங்கள் திட்டங்களை மேம்படுத்தவும், உங்கள் பார்வையாளர்களை புரிந்துகொள்ளவும் ஆன்கர் அனலிடிக்ஸ் உதவும். பாட்காஸ்ட்டுகள் ஒருவழி கம்யூனிகேஷன் கிடையாது. உங்களுக்கும் உங்கள் பார்வையாளர்களுக்கும் இடையே கருத்து பகிர்தலும், உரையாடல்களும் நிகழும். உங்கள் பார்வையாளர்களை பற்றி நீங்கள் நன்கு தெரிந்துகொள்வதுதான், அவர்களுடனான பகிர்தலை சிறப்பான முறையில் தொடர்வதற்கு சரியான வழி.

பார்வையாளர்கள் டெமோகிராஃபிக்ஸ் ஆப்சனை பயன்படுத்தி, பாலின, வயது வாரியான பார்வையாளர்களை புரிந்துகொள்ள உதவும். எடுத்துக்காட்டுக்கு, உங்கள் பாட்காஸ்ட்டுக்கு அதிகமான பெண் பார்வையாளர்கள் இருக்கும்பட்சத்தில், பெண்களை கவரும் விதமான கண்டெண்ட்டுகளை அதிகம் பதிவிடலாம்.

வயது மற்றொரு சிறப்பான மெட்ரிக். உங்களுக்கு அதிகமான இளம் வயது பார்வையாளர்கள் இருக்கிறார்களா..? அப்படியானால் வாய்ஸ் மெசேஜ்களை முயற்சிக்க வேண்டும். உங்கள் பார்வையாளர்களின் ரசனையை தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். ரசிகர்களின் ரசனைக்கு தகுந்த தலைப்புகளை தேர்வு செய்வதன் மூலம் தான் உங்கள் பாட்காஸ்ட்டை மார்கெட் செய்ய முடியும்.

உங்கள் பாட்காஸ்ட்டுக்கு பார்வையாளர்களை அழைத்துவருவதும், உங்கள் பாட்காஸ்ட்டை விட்டு செல்வதும் எதனால் என்பதை அறிந்துகொள்வதன் மூலம், உங்கள் எழுத்தை மேம்படுத்தலாம்.

ஆன்கரின் எபிசோட் ட்ராப்-ஆஃப் டேட்டா ஒரு கேம் சேஞ்சர். இதன்மூலம் எந்த எபிசோடின் எந்த நொடியில் அதிகமான பார்வையாளர்கள் வருகிறார்கள், எப்போது வெளியே செல்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதன்மூலம் அதற்கேற்ப உங்கள் கண்டெண்ட்டை மேம்படுத்திக்கொள்ளலாம்.

பாட்காஸ்ட்டை தேர்வு செய்ய இன்றைக்கு ரசிகர்களுக்கு நிறைய ஆப்சன் இருக்கிறது.

எபிசோட் ட்ராப்-ஆஃப் டேட்டா எங்கு தவறு நடக்கிறது என்பதை உங்களுக்கு உணர்த்தும். Actionable Insights தவறுகளை தவிர்க்க உதவும்.

இப்போது உங்களுக்கு எப்படி பாட்காஸ்ட்டை தொடங்கவேண்டும் என்று தெரியும். "Anchor by Spotify"-ல் உங்கள் ஆழ்மனதிலிருந்து பேசுங்கள். ஆப் உடன் இணையுங்கள்.

click me!