வாட்ஸ்அப் வெப் தளத்தில் View Once எனப்படும் ஒருமுறை மட்டும் பார்க்கக்கூடிய இமெஜ்களை இனி திறக்க முடியாது.
வாட்ஸ்அப் செயலியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘View Once’ என்ற அம்சம் கொண்டு வரப்பட்டது. ஒருவருக்கு ஒரு இமெஜ் அனுப்பும் போது, View Once என்பதை தேர்ந்தெடுக்கலாம். இதன்மூலம், எதிர்முனையில் இருப்பவர் அந்த படத்தை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அதன்பிறகு தானாகவே டெலிட் ஆகிவிடும். வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அவ்வாறு அனுப்பப்படும் இமேஜ் மெசேஜை ஓபன் செய்வதற்கு முன்பாகவே, இது ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் என்ற அறிவிப்பும் இருக்கும். இதனால் எதிர்முனையில் இருப்பவர்கள் உஷாராக அந்த மெசேஜை திறந்ததும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வந்தனர். இதுகுறித்து வாட்ஸ்அப்க்கு பயனர்கள் புகார் செய்திருந்தனர்.
WhatsApp செயலியில் விரைவில் சிறிய மாற்றம்!
View Once அம்சம் கொண்டு வந்ததே ஒரு முறை மட்டும் தான் அந்த மெசேஜை பார்க்க வேண்டும் என்பதற்காக. ஆனால், எதிர்முனையில் இருப்பவர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதால், அந்த அம்சம் கொண்டு வந்த நோக்கமே நீர்த்து போகிவிட்டதே என்று கமெண்ட் செய்தனர். அதன்பிறகு, அவ்வாறு View Once மெசேஜை ஸ்கீரின்ஷாட் எடுக்கமுடியாதபடி வாட்ஸ்அப் செய்தது.
இருப்பினும், வாட்ஸ்அப் வெப்பில் View Once மெசேஜ் பார்த்து, ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடிந்தது. ஸ்மார்ட்போனில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை தடை செய்ய முடியும். ஆனால், கணினியில் அவ்வாறு செய்ய முடியாது. இதனால் View Once அம்சத்தையே முற்றிலுமாக வாட்ஸ்அப் வெப் தளத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளது. இனி View Once ஆப்ஷன் மூலம் படங்கள் அனுப்பினால், அவற்றை ஸ்மார்ட்போனில் மட்டுமே பார்க்க முடியும். வாட்ஸ்அப் வெப் மூலம் பார்க்க முடியாது.
டெலிகிராம் செயலிக்குப் போட்டியாக வாட்ஸ்அப்பிலும் பலவிதமான அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் மிகமுக்கியமாக வாட்ஸ்அப்பில் குரூப்பில் இனி 1024 பேர் வரையில் சேர்த்துக்கொள்ளலாம், வீடியோ கால் அழைப்பில் 32 பேர் வரையில் ஒரே நேரத்தில் இணையலாம். ஆண்ட்ராய்டு, iOS என இரண்டு தளங்களிலும் இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப்பில் புதிதாக கம்யூனிட்டி என்ற அம்சமும் வரவுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.