விண்ணில் ஏவப்படும் இரண்டு ராக்கெட்டுகளும் வெவ்வேறு நேர இடைவெளியில் விண்ணில் ஏவப்படும். ஆனால், இரண்டு எந்த வரிசை எப்போது விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் விவரங்கள் வெளியாகவில்லை.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக, ஒரு பணியை முடிக்க இஸ்ரோ இரண்டு ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ இருக்கிறது. இஸ்ரோவின் சந்திரயான் -4 திட்டத்தில் நிலவில் இருந்து பாறைகளை எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு தனித்தனி ராக்கெட்டுகளை ஏவவுள்ளது.
ஹெவி-லிஃப்ட்டர் எல்விஎம்-3 மற்றும் பிஎஸ்எல்வி ஆகிய இரண்டு ராக்கெட்டுகள் ஒரே திட்டத்தின் வெவ்வேறு பேலோடுகளை சுமந்து வெவ்வேறு நாட்களில் விண்ணில் ஏவப்படும் என்று சொல்லப்படுகிறது. சந்திரயான்-3 திட்டத்தில் இருந்த விக்ரம் லேண்டரைப் போல, சந்திராயன்-4 திட்டத்திலும் ஒரு லேண்டர் இருக்கும். இதன் மூலம்தான் நிலவில் மென்மையான தரையிறக்கம் மேற்கொள்ளப்படும்.
2028க்கு முன் ஏவப்பட உள்ள சந்திரயான்-4 திட்டம் வெற்றி பெற்றால், சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை மீண்டும் பூமிக்குக் கொண்டுவரும் திறன் கொண்ட நான்காவது நாடாக இந்தியா மாறும்.
ஆன்லைனில் அலர்ட்டா இருக்கணும்... வெகுளித்தனமா பேசி 4.8 கோடியைப் பறிகொடுத்த தொழிலதிபர்!
தேசிய விண்வெளி அறிவியல் கருத்தரங்கில் பேசிய இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத், "சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து, அறிவியல் ஆய்வுகளுக்காக அவற்றை பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பி அனுப்புவதே சந்திரயான்-4 திட்டத்தின் நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.
2-3 தொகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-3 திட்டத்தைப் போல இல்லாமல், சந்திரயான்-4 திட்டத்தில் மொத்தம் ஐந்து தொகுதிகள் இடம்பெறுகின்றன. இதில் உந்துவிசை கலன், லேண்டர் எனப்படும் தரையிறங்கும் கலன், ஏறுவரிசை கலன், பரிமாற்ற கலன் மற்றும் மறு நுழைவு கலன் என ஐந்து தொகுதிகள் இடம்பெறும்.
விண்ணில் ஏவப்படும் இரண்டு ராக்கெட்டுகளும் வெவ்வேறு நேர இடைவெளியில் விண்ணில் ஏவப்படும். ஒரு ராக்கெட் பூமியின் சுற்றுப்பாதையைக் கடந்து நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி சுமார் 40 நாட்களில் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும். இதற்கு குறைவான எரிபொருளை பயன்படுத்தும்.
இரண்டாவது ராக்கெட் ரஷ்யாவின் லூனா-25 போல, எரிபொருள் சக்தியை பயன்படுத்தி விரைவாக நிலவின் சுற்றுப்பாதைக்குப் பயணிக்கும். ஆனால், இரண்டு எந்த வரிசை எப்போது விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் விவரங்கள் வெளியாகவில்லை.
சின்னப்பிள்ளைக்கு வீடு... திமுகவின் ஸ்டிக்கர் அரசியல்... முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி!