இன்டெல் கோர் அல்ட்ரா 7 சிப்.. AI Engine + கொண்ட Lenovo Yoga Slim 7i.. இப்போ இந்திய சந்தையிலும் - விலை என்ன?

By Ansgar R  |  First Published Mar 8, 2024, 6:32 PM IST

Lenovo Yoga Silm 7i : லெனோவா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த செவ்வாய் அன்று தனது புதிய அதிவேக லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.


லெனோவா தனது சமீபத்திய யோகா சீரிஸ் லேப்டாப்பான, யோகா ஸ்லிம் 7i என்ற மாடலை கடந்த செவ்வாயன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய மடிக்கணினி முதன்முதலில் இவ்வருட துவக்கத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற நுகர்வோர் மின்னணு கண்காட்சி (CES) 2024ல் வெளியிடப்பட்டது. இப்போது அது நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

யோகா ஸ்லிம் 6iன் Intel Core Ultra 7 செயலி மூலம் Intel Arc-ஒருங்கிணைக்கப்பட்ட கிராபிக்ஸ் உடன் இந்த புதிய லேப்டாப் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 14-inch OLED திரையைக் கொண்டுள்ளது. Lenovo Yoga Slim 7i 1.39kg எடையும் 14.9mm தடிமனையும் கொண்டுள்ளது. 

Latest Videos

undefined

அட்ரா சக்க.. இந்த மாதமே ரிலீஸ் ஆக போதா? Flip போனுடன் வரும் Vivo.. X Fold 3 & X Fold 3 Pro - விலை & ஸ்பெக்!

இந்தியாவில் Lenovo Yoga Slim 7iன் விலை ரூ. 1,04,999 ஆகும். 32GB LPDDR5X RAM மற்றும் 1TB SSD M.2 PCIe Gen 4 இன்பில்ட் ஸ்டோரேஜ். மடிக்கணினி லூனார் கிரே வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. ஆர்வமுள்ள பயனர்கள் லெனோவாவின் இணையதளம், லெனோவா பிரத்தியேக கடைகள், முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் பிற ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் இருந்து லேப்டாப்பை வாங்கலாம். 

அறிமுக சலுகையாக HDFC வங்கி கார்டுகளைப் பயன்படுத்துவதில் 10 சதவிகிதம் தள்ளுபடி மற்றும் கட்டணமில்லா EMI விருப்பங்களையும் பெற முடியும். 14.9 மிமீ தடிமன் மற்றும் 1.39 கிலோ எடையுடன், லெனோவா யோகா ஸ்லிம் 7i ஆனது MIL-STD 810H தர நீடித்து உழைக்கும் பாதுகாப்புடன் அலுமினியம் சேஸ்ஸைப் பெறுகிறது. 

இது 1,920 x 1,200 பிக்சல்கள், 60Hz Refresh Rate மற்றும் 400 nitsன் உச்ச பிரகாசம் கொண்ட 14-இன்ச் WUXGA OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மெல்லிய பெசல்களை வழங்கும், டிஸ்ப்ளே டால்பி விஷனை ஆதரிக்கிறது மற்றும் TUV ரைன்லேண்ட் குறைந்த நீல ஒளி சான்றிதழைக் கொண்டுள்ளது. கூடுதலாக, யோகா சீரிஸ் லேப்டாப் டால்பி அட்மோஸிற்கான ஆதரவுடன் குவாட் 2W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

நிறம் மாறும்.. 4 வருட அப்டேட்.. Vivo V30 Pro, Vivo V30 மாடல்களை அறிமுகப்படுத்திய விவோ.. விலை எவ்வளவு?

click me!