iQoo Neo 9 Racing Edition : பிரபல iQoo நிறுவனத்தின் புதிய Neo 9 Racing Edition மொபைல் இவ்வருடத்தில் முதல் பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
iQoo Neo 9 Racing Edition இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் வெளியிடப்பட்ட iQoo Neo 9 வரிசையில் இந்த கைபேசி அடங்கும். இந்த வரிசையில் iQoo Neo 9 மற்றும் iQoo Neo 9 Pro ஆகிய செல் போன்கள் உள்ளது. இந்த சூழலில் தான் இந்த புதிய ரேசிங் எடிஷன் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்களுக்கு வெளியாகியுள்ளது.
இந்த புதிய iQoo Neo 9 ரேசிங் எடிஷனில், Realme GT Neo 6 போன்ற சிப்செட் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பிரபல நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிவிப்பில் இந்த புதிய iQoo Neo 9 மாறுபாடு விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று பகிர்ந்துள்ளது. தற்போது உள்ள தகவல்களின்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இது வெளியாகலாம்.
இந்த புதிய ஸ்மார்ட் போன் 6.78-இன்ச் 1.5K 8T LTPO OLED டிஸ்ப்ளே மற்றும் 144Hz Refresh Rate மற்றும் 2,160Hz PWM டிம்மிங் ரேட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 8T LTPO தொழில்நுட்பம் மின் நுகர்வைக் குறைக்க உதவுவதாகவும் அதனால் பேட்டரி செயல்திறனை அதிகரிக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது. iQoo Neo 9 ரேசிங் பதிப்பு SM8635 என்ற குறியீட்டுப்பெயரால் இயக்கப்படலாம் என்று அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
iQoo Neo 9 ஆனது 6.78-இன்ச் 144Hz முழு-HD+ AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoC, 50-மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் 16-மெகாபிக்சல் முன் கேமராவுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OriginOS உடன் அனுப்பப்படுகிறது மற்றும் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,160mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.
இந்திய சந்தையில் இந்த புதிய போன் 40,000 என்ற விலைக்குள் விற்பனையாக அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.