Honor Magic 6 Pro : பிரபல Honor நிறுவனம், தனது புதிய ஹானர் மேஜிக் 6 ப்ரோ 5ஜி போனை இந்தியாவில் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, ஆரம்ப காலத்தில் (12 ஆண்டுகளுக்கு முன்) டச் போன்களை அறிமுகம் செய்து, பெரிய அளவில் விற்பனை செய்து வந்த நிறுவனம் தான் Honor. ஆனால் கடந்த சில வருடங்களாவே அதன் விற்பனை டல்லடித்து வரும் நிலையில், இப்பொது தனது புதிய ஃபிளாக்ஷிப் போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது Honor.
Honor Magic 6 Pro ஸ்பெக்ஸ்
undefined
குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 SoCல் இயங்குகிறது இந்த ஸ்மார்ட் போன். மற்றும் 6.8 இன்ச் LTPO டிஸ்ப்ளேயை இது கொண்டுள்ளது. இதில் 180 மெகாபிக்சல் "பெரிஸ்கோப்" சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. மேலும் இந்த கைபேசியில் 50-மெகாபிக்சல் கொண்ட முன்பக்க கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
இலவச டேட்டா.. நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி.. இன்னும் பல - வயநாட்டிற்காக களமிறங்கிய ஏர்டெல்!
வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,600mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது இந்த புதிய Honor போன். தூசி மற்றும் நீர் பாதுகாப்பை பொறுத்தவரை இந்த போனுக்கு IP68 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. Connectivity என்று வரும்போது 5G, Wi-Fi, ப்ளூடூத், GPS/AGPS, Galileo, GLONASS, Beidou, OTG மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புத்தம் புதிய ஹானர் மேஜிக் 6 ப்ரோ 5ஜி, 12 ஜிபி RAM + 512 ஜிபி ROM என்ற ஒரே பெரு அமைப்பில் மட்டுமே விற்பனைக்கு வருகின்றது. கருப்பு மற்றும் எபி கிரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கப்பெறும் இந்த போன் இந்திய சந்தையில் சுமார் 89,999 என்ற விலைக்கு விற்பனைக்கு வருகின்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இது Amazon, Explorehonor.com மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு வரும்.