வெறித்தனமான ஐபோன் ரசிகரின் திருமண அழைப்பிதழ்! ட்ரெண்டிங்கில் கலக்கும் விசாகப்பட்டினம் ஜோடி!

By SG Balan  |  First Published Jul 29, 2024, 10:59 PM IST

திருமண அழைப்பிதழின் வீடியோவை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபோனைப் போன்று வடிவமைக்கப்பட்ட புதுமையான திருமண அழைப்பிதழ் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.


திருமண அழைப்பிதழ் புதுமணத் தம்பதியின் ரசனையின் வெளிப்பாடாகவும் இருக்கும். சமீப காலமாக திருமண அழைப்பிதழை புதுமையாக வடிவமைப்பது ஒரு ட்ரெண்டாக மாறியுள்ளது. அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் ஒரு ஜோடி ஐபோன் தீம் கொண்ட வித்தியாசமான திருமண அழைப்பிதழை வெளியிட்டுள்ளனர்.

இந்தத் திருமண அழைப்பிதழின் வீடியோவை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபோனைப் போன்று வடிவமைக்கப்பட்ட புதுமையான திருமண அழைப்பிதழ் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

Tap to resize

Latest Videos

undefined

மூன்று பக்கங்கள் ஒன்றாக ஒட்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த அழைப்பிதழின் முகப்புப் பக்கத்தில், தொலைபேசியின் வால்பேப்பரைப் போல திருமண ஜோடிகளின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஜோடியின் படத்துக்கு மேலே திருமண நேரம் மற்றும் தேதி ஆகிய விவரங்கள் உள்ளன.

Earn on Instagram: இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? ஈசியான 5 வழிகள் இதோ!

அழைப்பிதழில் உள்ள பக்கங்களில் ஒன்றில் வாட்ஸ்அப் உரையாடல் இடம்பெற்றுள்ளது. அதில், லொகேஷன் அனுப்பு என்று கேட்க, திருமணம் நடைபெறும் இடத்தின் விவரங்களை பதிலாகச் சொல்வது போல ஸ்கிரீன்ஷாட் ஒன்று உள்ளது. அழைப்பிதழின் பின்புறத்தில் ஒரு 3டி எஃபெக்டில் ஐபோன் கேமரா போன்ற டிசைன் உள்ளது.

இதுவரை இந்த வீடியோ 15 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். இந்தத் தனித்துவமான வடிவமைப்பைப் பார்த்து பலரும் தங்கள் கருத்துகளை கூறிவருகின்றனர். சிலர் இந்த திருமண அழைப்பிதழை தயாரிக்க என்ன செலவு ஆனது என்று விசாரித்துள்ளனர்.

''ஒரு டிசைனர் திருமணம் செய்து்கொள்ளும்போது...! இந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது'' என்று மற்றொருவர் கூறியுள்ளார். ''மிகவும் விலை உயர்ந்த திருமண அழைப்பிதழ்'' என ஒருவர் தெரிவித்துள்ளார். ''உங்கள் யோசனையைப் பாராட்டுகிறேன்'' என்றும், ''நீங்கள் உண்மையிலேயே திறமையானவர்'' என்றும் பலர் இந்த ஐடியாவைப் பாராட்டியுள்ளனர்.

பெட்ரோல் பங்கில் மொபைல் போன் பயன்படுத்தினால் தீ விபத்து ஏற்படுமா?

click me!