இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களுக்கு செம டிமாண்ட்! மின்னல் வேகத்தில் எகிறிய ஐபோன் விற்பனை!

By SG Balan  |  First Published Jul 15, 2024, 8:33 PM IST

ஐபோன் ஏற்றுமதியின் அடிப்படையில் இந்தியா ஆப்பிள் நிறுவனத்தின் ஐந்தாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது என 2023ஆம் ஆண்டிற்கான மோர்கன் ஸ்டான்லி கணக்கெடுப்பு கூறுகிறது. 9.2 மில்லியன் ஏற்றுமதிகளுடன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.


இந்தியாவில் ஆப்பிளின் ஆண்டு விற்பனையானது 8 பில்லியன் டாலரைத் தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் 6 பில்லியன் டாலர் விற்பனையை விட 33% அதிகம். ஆப்பிள் தயாரிப்பாளருக்கு இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2024 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஓராண்டில் ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை அதிகரித்திருப்பதற்கு ஐபோன் விற்பனை கூடியதுதான் முக்கியக் காரணம். அதுவும் மொத்த வருவாயில் பாதிக்கும் மேல் ஐபோன் விற்பனை மூலம் கிடைத்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ஐபோன் ஏற்றுமதியின் அடிப்படையில் இந்தியா ஆப்பிள் நிறுவனத்தின் ஐந்தாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது என 2023ஆம் ஆண்டிற்கான மோர்கன் ஸ்டான்லி கணக்கெடுப்பு கூறுகிறது. 9.2 மில்லியன் ஏற்றுமதிகளுடன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.

அலப்பறை கிளப்புறோம்... ரிலீசுக்கு ரெடியான ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450! மிரட்டலான வீடியோ அப்டேட்!

இந்த ஆண்டு மார்ச் காலாண்டு முடிவில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பேசிய ​​ஆப்பின் நிறுவன சி.இ.ஓ. டிம் குக், இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, மிகவும் மகிழ்ச்சி அடைவதாகச் சொல்லி இருக்கிறார்.

ஆப்பிள் நிறுவனத்தின் 8 பில்லியன் டாலர் விற்பனை பெரியதாகத் தெரிந்தாலும், கடந்த நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய வருவாயான 383 பில்லியன் டாலரில் இது ஒரு சிறிய பகுதியே. ஆனால், சீனாவில் ஆப்பிள் ஈட்டும் 72.6 பில்லியன் டாலர் வருவாயை விட இது மிகக் குறைவுதான்.

ஆனால், இந்தியாவில் காணப்படும் வளர்ச்சி ஆப்பிள் நிறுவனத்திற்கு முக்கியமானதாக உள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையான சீனாவில் பல சவால்களை எதிர்கொண்டுவரும் சூழலில் இந்தியா அந்நிறுவனத்துக்குக் கைகொடுக்கிறது.

அமெரிக்கா-சீனா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது. இப்போது சுமார் 14% ஐபோன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சமீபத்திய ஐபோன் 15 மாடலும் அடங்கும்.

கேப்சூல் கார் தெரியுமா? டயர், ஸ்டியரிங் இல்லாமல் இயங்கும் எதிர்கால எலெட்ரிக் கார் இதுதான்!

click me!