OPPO A3 Pro: சான்சே இல்ல... வெற லெவல் டேமேஜ் ப்ரூஃப் பாடியுடன் ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன்

By SG Balan  |  First Published Jun 27, 2024, 4:06 PM IST

OPPO A3 Pro நீடித்து உழைக்கும் நீண்ட கால செயல்திறன் கொண்டதாக இருப்பதுடன் அதிநவீன வசதிகளுடன் ப்ரீமியம் வடிவமைப்பையும் பெற்றுள்ளது.


OPPO நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் தனக்கென நற்பெயரைக் கொண்டது, ஓப்போவின் சமீபத்திய ஸ்மார்ட்போன் OPPO A3 Pro அதற்கு விதிவிலக்கல்ல. "ஒரு படி மேலே" என்ற உத்தரவாதத்துடன், OPPO பல புதுமைகளைச் செய்துள்ளது. இது பயனர்களுக்கு மேம்பட்ட பலனைத் தருகிறது. இந்த மொபைலின் 128GB வேரியண்ட் ரூ.17,999 மற்றும் 256GB வேரியண்ட் ரூ.19,999 என வசதியான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. OPPO A3 Pro நீடித்து உழைக்கும் நீண்ட கால செயல்திறன் கொண்டதாக இருப்பதுடன் அதிநவீன வசதிகளுடன் ப்ரீமியம் வடிவமைப்பையும் பெற்றுள்ளது.

இந்த விலைப் பிரிவில் இந்த ஓப்போ ஸ்மார்ட்போன் தனித்து நிற்க என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

சேதம் அடையாத கட்டமைப்பு:

OPPO A3 Pro தனிச்சிறப்பு அம்சம் அதன் ஆர்மர் பாடி கட்டமைப்பு. ட்ராப் மற்றும் இம்பாக்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த அம்சம் மொபைல் எளிதில் சேதம் அடைவதைத் தடுக்கும். சுவிஸ் SGS ஷாக் மற்றும் ஃபால் சான்றிதழ் பெற்றிருக்கிறது. இதனால், OPPO A3 Pro ஒரு திடமான ஸ்மாட்போனாக உள்ளது.

இந்த மொபைலை நீடித்து உழைக்கச் செய்வதற்காக OPPO தனது முழு பொறியியல் திறமையையும் காட்டியிருக்கிறது. மதர்போர்டின் மேல் அட்டையில் உள்ள ஹார்டுவேர் AM04 என்ற ஏரோஸ்பேஸ்-கிரேடு தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் பாதுகாப்புக்கான கிளாஸ் டபுள் ஸ்ட்ராங் வலிமையைக் கொண்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பிற்காக, புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆன்டி-ட்ராப் ஷீல்ட் கேஸ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொபைலை தவறுதலாகக் கீழே போட்டாலும் சேதம் அடையாமல் பாதுகாக்க முடியும்.

ஈரமான கைகளாலும் பயன்படுத்தலாம்:

ஸ்மார்ட்ஃபோனை அவசரமாக ஈரக்கைகளால் எடுத்து பயன்படுத்தும்போது சரியாக கையாள முடியாமல் போகும் அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். ஜிம்மில் உடன்பயிற்சிக்குப் பிறகு வியர்வை படிந்த கைகளால் போனை எடுக்கும்போது அல்லது கை கழுவியவுடன் வரும் அவசர அழைப்பை ஏற்கும் போது ஸ்கிரீனில் நீர்த்துளிகள் தெறித்து எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால், OPPO அதற்கு தீர்வு கண்டுபிடித்துவிட்டது. OPPO A3 Pro மொபைல் ஃபிளாக்ஷிப் ஸ்பிளாஸ் டச் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதனால் திரையில் நீர்த்துளிகள் அல்லது மூடுபனி இருந்தாலும் சுமூகமாக செயல்படும். IP54 சான்றிதழ் பெற்றிருப்பதால், OPPO A3 Pro நீர்த்துளிகள் மற்றும் தூசியையும் எளிதில் தாங்கும்.

மெல்லிய, இலகுவான வடிவமைப்பு:

OPPO A3 Pro வெறும் 7.68 மிமீ அளவுக்கு மெல்லியதாகவும், 186 கிராம் எடையைக் கொண்டதாகவும் உள்ளது. கண் கவரும் பளபளப்பான பிரேம் மெட்டல் போன்ற லுக்கைக் கொடுக்கிறது. மேட் பினிஷ் கைரேகை தடத்தில் இருந்து பாதுகாக்கிறது. கேமரா அமைப்பு செவ்வக வடிவில் உள்ளது. மூன்லைட் பர்ப்பிள், ஸ்டாரி பிளாக் நிறங்களில் OPPO A3 Pro கிடைக்கிறது.

அல்ட்ரா பிரைட் டிஸ்ப்ளே:

OPPO A3 Pro ஸ்மார்ட்போன் 120Hz, 90Hz மற்றும் 60Hz புதுப்பிப்பு விகிதங்களுடன் 120Hz அல்ட்ரா பிரைட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் தனித்துவமான சன்லைட் மோட், சூரிய வெளிச்சத்திலும் மொபைலை பயன்படுத்துவதை எளிதாக்குகிறது. பிரகாசமான சூரிய ஒளியை தானாகவே அடையாளம் கண்டு, திரையின் பிரகாசத்தை 1000 நிட்கள் வரை அதிகரிக்கிறது. இதேபோல, கண் பாதுகாப்புக்கான Eye Protection மோட், நீண்ட நேரம் போனை பயன்படுத்தினாலும் கண் சோர்வு ஏற்படாமல் இருக்க உதவுகிறது. வசதியான வியூயிங் அனுபவத்தையும் உறுதி செய்கிறது.

மேம்படுத்தப்பட்ட பேட்டரி:

OPPO A3 Pro இல் உள்ள பேட்டரி பயனர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 5100mAh ஹைப்பர்-எனர்ஜி பேட்டரி 45W SUPERVOOCTM ஃபிளாஷ் சார்ஜ் திறனுடன் வருகிறது. இதன் மூலம் மொபைலை வேகமாகவும் பாதுகாப்பாகவும் சார்ஜ் செய்யலாம். புதிய A/B டயாபிராம் (A/B diaphragm) சிறந்த பேட்டரி செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. OPPO பேட்டரி பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 1600 முறை சார்ஜிங் மற்றும் டிஸ்சார்ஜிங் சோதனைகளை நடத்தியுள்ளது. இதனால் பேட்டரியின் ஆயுள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதற்கு உத்தரவாதம் கிடைக்கிறது.

தடையற்ற நெட்வொர்க் மாற்றம்:

OPPO A3 Pro ஸ்மார்ட்போன் நெட்வொர்க் ஸ்விட்ச் சேவைகளின் தொகுப்புடன் வருகிறது. OPPO நிறுவனத்தின் பிரைவசி AI LinkBoost அனைத்து இடங்களிலும் நிலையான இணைப்புகளை உறுதிசெய்ய சிஸ்டம் லெவல் AI மாதிரியைப் பயன்படுத்துகிறது. இது பலவீனமான நெட்வொர்க் இருக்கும் சூழல்களில் நிலையான இணைப்பை கிடைக்கச் செய்கிறது. எல்லா நேரங்களிலும் நெட்வொர்க் இணைப்பில் இருப்பதை எளிதாக்குகிறது.

AI தொழில்நுட்பத்துடன் கச்சிதமான போட்டோஸ்:

OPPO A3 Pro மொபைலின் 50 MP AI டூயல் கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா, புகைப்பட எடிட்டிங் திறன்களை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் புகைப்படங்களில் உள்ள பொருள்கள் மற்றும் எழுத்துக்களை அடையாளம் காண முடியும். OPPO பிரத்யேகமான நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, AI Eraser அம்சத்தை வழங்குகிறது.

சளைக்காத செயல்திறன்:

OPPO A3 Pro விரிவாக்கக்கூடிய RAM மற்றும் MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 50 மாதங்கள் சுமூகமான செயல்பாட்டுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது. ColorOS 14 நிலையான செயல்திறன் மற்றும் 5G இணைப்பை உறுதிபடுத்துகிறது.

தீர்ப்பு:

OPPO A3 Pro ஸ்மார்ட்போன் தனித்துவமான பயனர் அனுபவத்தை வழங்குவதாக உள்ளது. அதிநவீன தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கி இருப்பது, நீடித்த உழைப்புக்கு வழிவகுக்கிறது. 128 GB மற்றும் 256 GB மாடல்கள் முறையே ரூ.17,999 மற்றும் ரூ.19,999 விலையில் கிடைக்கின்றன.

சுவிஸ் SGS ஷாக் மற்றும் ஃபால் சான்றிதழ்கள் மிலிட்டரி ஸ்டாண்டர்ட் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறது. சேதம் அடையாத, உறுதியான மொபைலாகவும் ஆக்குகிறது. ஸ்பிளாஷ் டச் பிளஸ், IP54 பாதுகாப்பு மற்றும் அதிவேக சார்ஜிங் போன்ற புதிய தொழில்நுட்ப அம்சங்கள் OPPO A3 Pro ஸ்மார்ட்போனை ஒரு சக்திவாய்ந்த மொபைலாக மாற்றுகின்றன. இது நீடித்த செயல்திறனை வழங்குவதோடு, மேம்பட்ட வாழ்க்கை முறைக்குத் தேவையான வசதிகளையும் கொடுக்கிறது.

சலுகைகளைப் பெற:

• ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, எஸ்.பி.ஐ மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும்போது 10% உடனடி கேஷ்பேக் பெறலாம்.

• இந்த ஸ்மார்ட்போனை வாங்க 6 மாதங்கள் வரை வட்டியில்லாத EMI ஆப்ஷனும் உள்ளது. முன்பணம் செலுத்தாமல் கடன் பெறும் வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

click me!