சமீபத்திய மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பயனர்களை குறிவைத்து ஃபிஷிங் தாக்குதல் நடத்தப்படுவதாக இந்திய சைபர் பாதுகாப்புதுறை (CERT-In) எச்சரித்துள்ளது.
அண்மையில், மைக்ரோசாப்ட் விண்டோஸில் CrowdStrike Falcon Sensor மென்பொருள் மேம்படுத்தலில் ஏற்பட்ட பிழையானது மைக்ரோசாஃப்ட் விண்டோஸுக்கு உலக அளவில் முடங்கியது. இதனால், உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் விமானங்களில் சேவைக் குளறுபடிகள் ஏற்பட்டன. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. பெரிய அளவில் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டன.
இந்நிலையில், CrowdStrike-ல் பாதிக்கப்பட்ட பயனர்களை குறிவைத்து ஃபிஷிங் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக இந்திய சைபர் பாதுகாப்புதுறை நிறுவனம் எச்சரித்துள்ளது. CERT-In இன் ஆலோசனையின்படி, CrowdStrike ஐப் பயன்படுத்துபவர்களை குறிவைத்து, உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பு சிக்கலை சரிசெய்வதாகக்கூறி டேட்டா திருட்டுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ட்ரோஜன் மால்வேரை மீட்டெடுக்கும் கருவிகள் போல காட்டிக்கொண்டு இந்த ஃபிஷிங் மோசடியில் ஈடுபடிகின்றனர். இந்த தாக்குதல் மூலம், உங்கள் கணினி மீண்டும் செயலிழப்பு, டேட்டா இழப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுப்பதாக CERT-In எச்சரித்துள்ளது.
undefined
ரூ.63,129 வரை சம்பளம்.. வொர்க் ப்ரம் ஹோம்.. வீட்டிலிருந்து வேலை.. மைக்ரோசாப்ட்டில் சேர வாய்ப்பு!
URL பட்டியல்!
மேலும், CERT-In ஃபிஷிங் URLகளின் பட்டியலை வழங்கியுள்ளது. வணிகங்கள் தங்கள் ஃபயர்வால் விதிகளை அமைக்கும்போது இணைப்புகளைத் தடுப்பது பற்றி கூடுதலாக சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளது. மேலும், CERT-In ஆனது சில முக்கிய URLகளை பட்டியலிடுகிறது, அவை இணைப்புகளைத் தடுக்க தங்கள் ஃபயர்வால் விதிகளை உள்ளமைப்பை கருத்தில் கொள்ள வேண்டும்.
Microsoft Outage | மைக்கரோசாப்ட் செயலிழப்பின் பின்னணி என்ன? வெளியிட்டது CrowdStrike!