Honda Hawk 11: அசத்தல் லுக்கில் புது கஃபே ரேசர் மாடல் - ஹோண்டா அதிரடி..!

By Kevin Kaarki  |  First Published Mar 22, 2022, 9:58 AM IST

இந்தியாவில் ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் மாடல்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் NT1100 மாடலுக்கும் ஹோண்டா காப்புரிமை பெற்று இருக்கிறது. 


ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா ஹாக் 11 நியோ-ரெட்ரோ கஃபே ரேசர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 2022 ஒசாகா மோட்டார்சைக்கிள் விழாவில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

புகைப்படங்களின் படி புதிய ஹோண்டா கஃபே ரேசர் மோட்டார்சைக்கிள் மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், க்ளிப் ஆன் ஹேண்டில்பார்கள், பார் எண்ட் மிரர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மோட்டார்சைக்கிளில் மஸ்குலர் ஃபியூவல் டேன்க், நீண்ட எக்சாஸ்ட், இருவர் அமரும் வகையிலான ஒற்றை இருக்கை அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. 

Latest Videos

undefined

ஹோண்டா ஹாக் 11 மோட்டார்சைக்கிளில் ஆஃப்ரிக்கா டுவின் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1084சிசி பேரலெல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் புதிய ஹாக் 11 கஃபே ரேசர் மாடலில் ஸ்டீல் கிராடில் சேசிஸ் உள்ளது. ஹாக் மாடலில் இந்த என்ஜின் 101 ஹெச்.பி. திறன், 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், மேனுவல் மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

பிரேக்கிங்கிற்கு புதிய ஹோண்டா ஹாக் 11 கஃபே ரேசர் மோட்டார்சைக்கிளில் நிசின் கேலிப்பர்கள், பின்புறம் ஒற்றை டிஸ்க், முன்புறம் USD ஃபோர்க்குகள், பின்புறத்தில் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. முழுமையான ரேசர் பைக் தோற்றத்தில் ஹோண்டா ஹாக் 11 டிரையம்ப் ஸ்பீடு டிரிபில் 1200 RR மற்றும் எம்.வி. அகுஸ்டா சூப்பர் வெலோஸ் போன்ற மாடல்களுடன் இணைகிறது. 

இந்தியாவில் ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் மாடல்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் NT1100 மாடலுக்கும் இந்தியாவில் காப்புரிமை பெற்று இருக்கிறது. இந்த வரிசையில் புதிய ஹோண்டா ஹாக் 11 கஃபே ரேசர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தனது 2022 ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 16.01 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 17.55 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புதிய ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் 1083 சிசி, பேரலெல் டுவின், லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 98 ஹெச்.பி. திறன், 103 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் மேனுவல் மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

click me!