மிட் ரேன்ஜ் விலையில் புது 5ஜி ஸ்மார்ட்போன் - சாம்சங் அதிரடி..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Mar 21, 2022, 04:40 PM IST
மிட் ரேன்ஜ் விலையில் புது 5ஜி ஸ்மார்ட்போன் - சாம்சங் அதிரடி..!

சுருக்கம்

புதிய ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட்கள், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கின்றன.

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி A53 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மாரட்போன் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய சாம்சங் கேலக்ஸி A53  5ஜி மாடலில் 6.5 இன்ச் இன்ஃபினிட்டி ஒ 120Hz FHD+ சூப்பர் AMOLED ஸ்கிரீன், சாம்சங் எக்சைனோஸ் 1280 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய கேலக்ஸி A53 5ஜி மாடல் ஆண்ட்ராய்டு 12 ஒ.எஸ். கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட்கள், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கின்றன. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5MP டெப்த் சென்சார், 5MP மேக்ரோ கேமரா மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி A53 5ஜி அம்சங்கள்:

- 6.5 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED, இன்ஃபினிட்டி ஒ 120Hz டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோர் எக்சைனோஸ் 1280 பிராசஸர்
- மாலி-G68 GPU
- 6GB ரேம், 128GB மெமரி
- 8GB ரேம், 256GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 4.1
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 64MP பிரைமரி கேமரா
- 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
- 5MP டெப்த் சென்சார்
- 5MP மேக்ரோ கேமரா
- 32MP செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- சாம்சங் பே
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை விவரங்கள்:

சர்வதேச சந்தையில் சாம்சங் கேலக்ஸி A53 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக், வைட், லைட் புளூ மற்றும் பீச் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 34 ஆயிரத்து 499 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

புதிய சாம்சங் கேலக்ஸி A53 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெற வருகிறது. இதன் விற்பனை மார்ச் 25 ஆம் தேதி தொடங்குகிறது. புதிய கேலக்ஸி A53 5ஜி ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு வங்கி சார்ந்து ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக் அல்லது ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்: ரூ.14,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 10! வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
அனுமதி இல்லாமல் போட்டோவை பயன்படுத்தினால் சிறை?.. டீப் ஃபேக் மசோதா சொல்வது என்ன? முழு விவரம் இதோ!