Skoda Kushaq Monte Carlo: புதிய ஸ்பெஷல் எடிஷன் வெளியீட்டுக்கு தயாராகும் ஸ்கோடா!

By Kevin KaarkiFirst Published Mar 21, 2022, 11:20 AM IST
Highlights

Skoda Kushaq Monte Carlo: ஸ்கோடா குஷக் டாப் எண்ட் ஸ்டைல் வேரியண்டை விட புதிய குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் மாடலின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

ஸ்கோடா இந்தியா நிறுவனம் புத்தம் புதிய குஷக் மாண்ட் கர்லோ காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 

முந்தைய ரேபிட் மாண்ட் கர்லோ மாடலை போன்றே, குஷக் மாண்ட் கர்லோ மாடலிலும் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் விசேஷ அப்டேட்கள் செய்யப்பட இருக்கின்றன. இது ஸ்டாண்டர்டு மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கும். குஷக் மாண்ட் கர்லோ மாடலில் அதன் சர்வதேச எடிஷனில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அனைத்தும்  இந்திய வேரியண்டிலும் வழங்கப்படும் என தெரிகிறது.

டிசைன்:

இதன் வெளிப்புறம் பிளாக்டு-அவுட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் குரோம் பிட்கள் மற்றும் பேட்ஜிங் உள்ளிட்டவை பிளாக் நிறம் கொண்டிருக்கின்றன. இத்துடன் வெளிப்புறத்தில் ரெட் மற்றும் வைட் நிற பெயிண்டிங் செய்யப்பட்டு உள்ளது. புதிய குஷக் மாண்ட் கர்லோ எடிஷனில் 205/55 R17 ரக டையர்கள் மற்றும் அலாய் வீல் டிசைன் வழங்கப்பட இருக்கிறது. இதன் அலாய் வீல் டிசைன் முந்தைய தலைமுறை ஆக்டேவியா RS245 மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய காரின் முன்புற ஃபெண்டர்களில் மாண்ட் கர்லோ பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது. உள்புறத்தில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், புதிய ஸ்லேவியா மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. இத்துடன் ரெட் நிற கிராஃபிக்ஸ் வழங்கப்பட இருக்கிறது. இதன் இருக்கைகளில் டூயல் டோன் ரெட் பிளாக் நிற கவர்கள், மாண்ட் கர்லோ பேட்ஜிங் உடன் வழங்கப்பட இருக்கிறது. 

இண்டீரியர்:

டேஷ்போர்டு, நான்கு கதவுகள் மற்றும் செண்டர் கன்சோலில் சிவப்பு நிற அக்செண்ட்கள் இடம்பெறுகின்றன. மற்ற அம்சங்கள் குஷக் ஸ்டைல் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட இருக்கிறது. அதன்படி புதிய குஷக் மாண்ட் கர்லோ எடிஷனில் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேடிக் வைப்பர்கள், ஹெட்லேம்ப்கள், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், ஆறு ஸ்பீக்கர்கள் கொண்ட ஸ்பீக்கர் சிஸ்டம், சப் வூஃபர், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், டையர் பிரெஷர் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

என்ஜின்:

முந்தைய தகவல்களுக்கு முற்றிலும் முரணாக குஷக் மாண்ட் கர்லோ மாடலில் ஒற்றை சன்ரூஃப் வழங்கப்பட இருக்கிறது. புதிய ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனில் 115 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.0 லிட்டர் யூனிட், 150 ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

இத்துடன் 1.0 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. யூனிட் வழங்கப்படுகிறது. ஸ்கோடா குஷக் டாப் எண்ட் ஸ்டைல் வேரியண்டை விட புதிய குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் மாடலின் விலை ரூ. 80 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

click me!